Posts

Showing posts from October, 2022

பாலிவுட்டில் செட்டிலாகிறாரா அட்லீ? ஜவான் ஷூட்டிங் கேப்பில் சல்மானிடம் கதை சொன்ன சுவாரஸ்யம் கோலிவுட்டில் ராஜா ராணி மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமான அட்லீ குமார் விஜய் உடனான மூன்று படங்களை இயக்கியதை அடுத்து தமிழ் சினிமாவின் முக்கியமான கமர்சியல் இயக்குநர்களில் ஒருவராகவும் இணைந்துவிட்டார். இதுபோக பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கானையே இயக்கும் அளவுக்கு அட்லீ உயர்ந்துவிட்டார். பான் இந்தியா படமாக உருவாகி வரும் ஷாருக்கானின் ஜவானில் தீபிகா படுகோன், நயன்தாரா, பிரியாமணி, விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்து வருகிறார்கள். 2023 ஜூன் 2ல் படம் திரையில் வெளியாகும் என தகவலும் வெளியாகியிருக்கிறது. இதனிடையே ஜவான் படத்துக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு திரும்பி மீண்டும் விஜய்யை அட்லீ இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது புது அப்டேட் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. அதன்படி, ஷாருக் உடனான ஜவான் பட வேலைகள் முடிந்த பிறகு இந்தி திரையுலகின் மிக முக்கியமான உச்ச நட்சத்திரமான சல்மான் கானை வைத்து அட்லீ படம் இயக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜவான் பட ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே சல்மான் கானை சந்தித்து காமெடி படத்துக்கான கதையை அட்லீ கூறியிருக்கிறாராம். அட்லீயின் படங்களும் சல்மானுக்கு பிடித்து போகவே அவருடன் பணியாற்ற சம்மதம் தெரிவித்ததாக பாலிவுட் செய்திகள் மூலம் அறியப்படுகிறது. விரைவில் சல்மான் - அட்லீ படம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முன்னதாக விஜய்யின் 68வது படத்தை அட்லீ இயக்கப் போவதாகவும் தகவல் வந்ததும் குறிப்பிடத்தக்கது. ALSO READ:  ஜவான் படத்தில் யாரை கொல்லப்போகிறார் அட்லீ? - புது அப்டேட்டால் நெட்டிசன்களிடையே சலசலப்பு! Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
கோலிவுட்டில் ராஜா ராணி மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமான அட்லீ குமார் விஜய் உடனான மூன்று படங்களை இயக்கியதை அடுத்து தமிழ் சினிமாவின் முக்கியமான கமர்சியல் இயக்குநர்களில் ஒருவராகவும் இணைந்துவிட்டார். இதுபோக பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கானையே இயக்கும் அளவுக்கு அட்லீ உயர்ந்துவிட்டார். பான் இந்தியா படமாக உருவாகி வரும் ஷாருக்கானின் ஜவானில் தீபிகா படுகோன், நயன்தாரா, பிரியாமணி, விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்து வருகிறார்கள். 2023 ஜூன் 2ல் படம் திரையில் வெளியாகும் என தகவலும் வெளியாகியிருக்கிறது. இதனிடையே ஜவான் படத்துக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு திரும்பி மீண்டும் விஜய்யை அட்லீ இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது புது அப்டேட் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. அதன்படி, ஷாருக் உடனான ஜவான் பட வேலைகள் முடிந்த பிறகு இந்தி திரையுலகின் மிக முக்கியமான உச்ச நட்சத்திரமான சல்மான் கானை வைத்து அட்லீ படம் இயக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜவான் பட ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே சல்மான் கானை சந்தித்து காமெடி படத்துக்கான கதையை அட்லீ கூற...

காந்தாரா, பொன்னியின் செல்வன் இந்துக்களுடன் தொடர்புடையது - கங்கனா ரனாவத் மேற்கத்திய கலாசாரம் கொண்ட பாலிவுட் படங்களை ரசிகர்கள் புறக்கணிக்க துவங்கியுள்ளதாகவும், ‘காந்தாரா’, ‘பொன்னியின் செல்வன்’ போன்றப் படங்கள் இந்துமத தொடர்புடையதாக இருப்பதால் அதிகளவில் பார்வையாளர்களை ஈர்த்துள்ளதாகவும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது வழக்கமான ஒன்று. குறிப்பாக, பாலிவுட்டில் நிலவும் நெப்போட்டிசம் காரணமாகத் தான், ‘தோனி’ பட நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துக்கொண்டதாக கங்கனா ரணாவத் முன்வைத்த குற்றச்சாட்டு வைரலானது. இதனைத் தொடர்ந்து பாலிவுட் கதாநாயகர்கள், கதாநாயகிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது, அங்கு நிலவும் போதைப் பொருள் உள்பட பல விஷயங்களை இவர் பேசி வருகிறார். இந்நிலையில், ‘இந்தியா டூடே’ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், “இந்தியாவில் தற்போது வெளிவரும் படங்கள் இந்தியத் தன்மை நிறைந்தவையாக உள்ளது. ‘காந்தாரா’ படத்தை நாம் எடுத்துக்கொண்டால், அந்தப் படம் மிக நுண்ணிய பக்தி மற்றும் ஆன்மீகத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. அதேபோல் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் சோழர்களைப் பற்றியது. ‘காந்தாரா’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வரும் காட்சிகளை இந்து மதிப்புடைய விஷயங்களை பார்வையாளர்கள் தொடர்புப்படுத்தி பார்க்கிறார்கள். மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால், பாலிவுட் நம் கலாச்சாரத்திலிருந்து விலகி, மேற்கத்திய (தாக்குதல்) திரைப்படங்களை உருவாக்குகிறது. மக்கள் இனி அவர்களது படங்களை தங்களுடன் தொடர்புப்படுத்தி பார்க்க முடியாது என்று நான் நினைக்கிறேன். நடிகர்களை ரோல் மாடலாக கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்பது இப்போது சாமானியர்களுக்கும் தெரியும். நான் ஏன் ஸ்ரீராமரையோ அல்லது ஏபிஜே அப்துல் கலாமையோ அல்லது வேறு ஒருவரையோ ரோல் மாடலாக கொள்ளக் கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால் அவர்களின் இந்த விழிப்புணர்வு நட்சத்திரக் கலாச்சாரத்தை முடித்துவிட்டது. நெப்போட்டிசம் தற்போதும் குறையவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், மக்கள் இப்போது விழிப்புடன் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
மேற்கத்திய கலாசாரம் கொண்ட பாலிவுட் படங்களை ரசிகர்கள் புறக்கணிக்க துவங்கியுள்ளதாகவும், ‘காந்தாரா’, ‘பொன்னியின் செல்வன்’ போன்றப் படங்கள் இந்துமத தொடர்புடையதாக இருப்பதால் அதிகளவில் பார்வையாளர்களை ஈர்த்துள்ளதாகவும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது வழக்கமான ஒன்று. குறிப்பாக, பாலிவுட்டில் நிலவும் நெப்போட்டிசம் காரணமாகத் தான், ‘தோனி’ பட நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துக்கொண்டதாக கங்கனா ரணாவத் முன்வைத்த குற்றச்சாட்டு வைரலானது. இதனைத் தொடர்ந்து பாலிவுட் கதாநாயகர்கள், கதாநாயகிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது, அங்கு நிலவும் போதைப் பொருள் உள்பட பல விஷயங்களை இவர் பேசி வருகிறார். இந்நிலையில், ‘இந்தியா டூடே’ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், “இந்தியாவில் தற்போது வெளிவரும் படங்கள் இந்தியத் தன்மை நிறைந்தவையாக உள்ளது. ‘காந்தாரா’ படத்தை நாம் எடுத்துக்கொண்டால், அந்தப் படம் மிக நுண்ணிய பக்தி மற்றும் ஆன்மீகத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. அதேபோல் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்ப...

ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டு நடிகை சமந்தா பகிர்ந்த புகைப்படம் - இதுதான் காரணம் என உருக்கம்! தசை அழற்சி நோயால் அவதிப்பட்டு வரும் நடிகை சமந்தா, ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டே ‘யசோதா’ திரைப்படத்திற்கான டப்பிப் பேசும் புகைப்படத்தை பகிர்ந்து உருக்கமான பதிவுடன், விரைவில் மீண்டு வருவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, அறிமுக இயக்குநர்கள் ஹரி-ஹரிஷ் இயக்கியுள்ள ‘யசோதா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சமந்தாவுடன் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா உள்பட பலர் நடித்துள்ளனர். மணி சர்மா இசையமைத்திருக்கும் இந்தப் படம், வரும் நவம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றது. இதனை முன்னிட்டு, நேற்று முன்தினம் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் பெரும் வரவேற்பு பெற்றது. வாடகைத் தாய் மோசடி குறித்த கதையை கொண்ட இந்தப் படத்தின் ட்ரெய்லர் ட்ரெண்டிங் ஆனது. இந்நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டு டப்பிங் பேசும் புகைப்படத்தை பகிர்ந்து உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “யசோதா ட்ரெய்லருக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு பெருமகிழ்ச்சி அடைய செய்தது. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்பும் தொடர்பும் தான், வாழ்க்கை என் மீது வீசும் முடிவில்லாத சவால்களைச் சமாளிக்க எனக்கு வலிமை தருகிறது. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு Myositis எனப்படும் ஆட்டோ இம்யூன் ( தன்னெதிர்ப்பு நோய்கள்) இருப்பது கண்டறியப்பட்டது. முழுவதும் குணமடைந்தப் பிறகு இதை உங்களிடம் பகிரலாம் என்று நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட சிறிது காலம் எடுக்கும்போல் தெரிகிறது. நாம் எப்பொழுதும் வலுவான விஷயங்களை மட்டுமே முன்னிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதை நான் இப்போது மெல்ல மெல்ல உணர்கிறேன். இந்த பாதிப்பை ஏற்றுக்கொள்ள, நான் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறேன். விரைவில் நான் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனக்கு நல்ல நாட்களும், கெட்ட நாட்களும் உண்டு.... உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும்.... இன்னும் ஒரு நாளைக்கூட என்னால் சமாளிக்க முடியாது என நினைக்கும்போது கூட அந்த நிமிடம் எப்படியோ கடந்து செல்கிறது. இதனால் நான் குணமடைய இன்னும் ஒரு நாள் நெருங்கிவிட்டேன் என்றுதான் அர்த்தம் கொள்கிறேன். உங்களை நேசிக்கிறேன். இதுவும் கடந்து போகும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகைகள் ராஷி கண்ணா, ஸ்ரேயா சரண் உள்பட பலரும் அவருக்கு ஆறுதலுடன் கூடிய நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். View this post on Instagram A post shared by Samantha (@samantharuthprabhuoffl) Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தசை அழற்சி நோயால் அவதிப்பட்டு வரும் நடிகை சமந்தா, ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டே ‘யசோதா’ திரைப்படத்திற்கான டப்பிப் பேசும் புகைப்படத்தை பகிர்ந்து உருக்கமான பதிவுடன், விரைவில் மீண்டு வருவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, அறிமுக இயக்குநர்கள் ஹரி-ஹரிஷ் இயக்கியுள்ள ‘யசோதா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சமந்தாவுடன் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா உள்பட பலர் நடித்துள்ளனர். மணி சர்மா இசையமைத்திருக்கும் இந்தப் படம், வரும் நவம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றது. இதனை முன்னிட்டு, நேற்று முன்தினம் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் பெரும் வரவேற்பு பெற்றது. வாடகைத் தாய் மோசடி குறித்த கதையை கொண்ட இந்தப் படத்தின் ட்ரெய்லர் ட்ரெண்டிங் ஆனது. இந்நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டு டப்பிங் பேசும் புகைப்படத்தை பகிர்ந்து உருக்கமான ...

தனுஷின் ‘வாத்தி’ முதல் சிங்கிள் எப்போது? - ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்; இதுவும் அவர்தானா? நடிகர் தனுஷின் ‘வாத்தி’ படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு குறித்த தகவலை, அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் தெரிவித்துள்ளார். தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில், பள்ளி ஆசிரியராக தனுஷ் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், இளவரசு, பிரவீணா, ஸ்ருதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ்நாட்டு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வருகிற டிசம்பர் மாதம் 2-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் அதாவது, முதல் பாடல் எப்போது வெளியாகும் என்று இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் விரைவில் முதல் சிங்கிள் வெளியிடப்படும் என்றும், அந்தப் பாடலை பொயட் தனுஷ் தான் எழுதியுள்ளதாகவும், காதல் பாடலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். First single of #vaathi soon … written by our poet @dhanushkraja … a love song … #sir #vaathi #venkyatluri @SitharaEnts — G.V.Prakash Kumar (@gvprakash) October 29, 2022 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் தனுஷின் ‘வாத்தி’ படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு குறித்த தகவலை, அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் தெரிவித்துள்ளார். தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில், பள்ளி ஆசிரியராக தனுஷ் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், இளவரசு, பிரவீணா, ஸ்ருதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ்நாட்டு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வருகிற டிசம்பர் மாதம் 2-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் அதாவது, முதல் பாடல் எப்போது வெளியாகும் என்று இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் விரைவில் முதல் சிங்கிள் வெளியிடப்படும் என்றும், அந்தப் பாடலை பொயட் தனுஷ் தான் எழுதியுள்ளதாகவும், காதல் பாடலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். First singl...

காந்தாரா படத்தின் ‘வராஹ ரூபம்’ பாடல் சர்ச்சை வழக்கு -கோழிக்கோடு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ‘காந்தாரா’ படத்தின் ‘வராஹ ரூபம்’ பாடலை திரையரங்கு உள்பட அனைத்து தளங்களிலும் ஒலிபரப்ப கோழிக்கோடு முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கம் மற்றும் நடிப்பில், ஹோம்பாலே தயாரிப்பில், அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பில், கன்னடத்தில் கடந்த மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து, தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் இந்தத் திரைப்படம், இதுவரை 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. குறிப்பாக இந்தியில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வசூலை விட அதிகளவில் ‘காந்தாரா’ படம் வசூலித்துள்ளது. நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், பிரபாஸ், சிம்பு, கங்கனா ரனாவத், கார்த்தி உள்பட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தை பாராட்டியுள்ளனர். அத்துடன் இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் வரும் ‘வராஹ ரூபம்’ பாடல் கூஸ் பம்ப் ஆக இருந்தது. தற்போது இந்தப் பாடல் தான் காப்புரிமை சர்ச்சையில் சிக்கி தடை விதிக்கும் அளவுக்கு சென்றுள்ளது. ‘96’, ‘ஹே சினாமிகா’, ‘கார்கி’ உள்பட தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழித் திரைப்படங்களில் இசையமைத்து வரும் கோவிந்த் வசந்தாவின் இசைக்குழு தான் ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’. இவரும், இவரது நண்பர்களும் இணைந்து நடத்திவரும் இந்த இசைக்குழு, மலையாள மொழியில் தனிப் பாடல்களை இயற்றி வெளியிட்டும் வருகிறது. அதன்படி, கடந்த 2017-ம் ஆண்டு ‘நவரசம்’ என்கிற பாடலை இக்குழு இயற்றி வெளியிட்டது. யூடியூபில் வெளியான இந்தப் பாடலை பல லட்சம் பேர் பார்த்து ரசித்திருந்தனர். அந்தப் பாடலும், ‘காந்தாரா’ படத்தின் ‘வராஹ ரூபம்’ பாடலும் ஒன்றாக இருப்பதாக படம் வெளியானப் போதே சர்ச்சை கிளம்பியது. இதனைத் தொடர்ந்து ‘நவரசம்’ பாடலின் காப்பிதான் ‘வராஹ ரூபம்’ எனக் குற்றம்சாட்டிய ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’ இசைக்குழு, இரண்டு பாடலுக்கும் தவிர்க்க முடியாத நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்று தெரிவித்ததுடன் இன்ஸ்டாகிராமில் ஒரு அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தது. அதில், “வராஹ ரூபம் பாடல் காப்புரிமைச் சட்டத்தை மீறி இயற்றப்பட்டிருக்கிறது. பாடல் திருட்டுக்கும், பாடலைத் தழுவி இயற்றப்படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்தப்பாடல் ‘நவரசம்’ பாடலின் காப்பி என்பதால் சட்டரீதியாக ‘காந்தாரா’ படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம். இதற்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும்” எனக் கூறியிருந்தது. ஆனால் இதனை ‘காந்தாரா’ படக்குழு மறுத்திருந்தது. இரண்டு பாடல்களும் ஒரே ராகத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் ஒரே மாதிரியாக இருப்பதாக ‘காந்தாரா’ படக்குழு தெரிவித்ததை ஏற்க மறுத்த தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு சட்டரீதியாக வழக்கும் தொடர்ந்தது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய 'வராஹ ரூபம்' பாடலை திரையரங்குகளில் ஒலிபரப்புவதை நிறுத்துமாறு ‘காந்தாரா’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு கேரள நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கோழிக்கோடு முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவின் அனுமதியின்றி ‘காந்தாரா’ படத்தில் வரும் ‘வராஹ ரூபம்’ பாடலை அதன் தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், Amazon, YouTube, Spotify, Wynk Music, Jiosavan போன்ற எந்தவொரு ஸ்ட்ரீமிங் தளங்களிலும் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது. மேலும் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
‘காந்தாரா’ படத்தின் ‘வராஹ ரூபம்’ பாடலை திரையரங்கு உள்பட அனைத்து தளங்களிலும் ஒலிபரப்ப கோழிக்கோடு முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கம் மற்றும் நடிப்பில், ஹோம்பாலே தயாரிப்பில், அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பில், கன்னடத்தில் கடந்த மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து, தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் இந்தத் திரைப்படம், இதுவரை 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. குறிப்பாக இந்தியில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வசூலை விட அதிகளவில் ‘காந்தாரா’ படம் வசூலித்துள்ளது. நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், பிரபாஸ், சிம்பு, கங்கனா ரனாவத், கார்த்தி உள்பட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தை பாராட்டியுள்ளனர். அத்துடன் இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் வரும் ‘வராஹ ரூபம்’ பாடல் கூஸ் பம்ப் ஆக இருந்தது. தற்போது இந்தப் பாடல் தான் காப்புரிமை சர்ச்சையில் சிக்கி தடை விதிக்கும் அள...

புரோமோஷனுக்காக இப்படியா? நடிகை பார்வதியையும், நித்யாவையும் ஜாலி கேலி செய்யும் ரசிகர்கள் நடிகை பார்வதியும், நித்யாமேனனும் தனது இன்ஸ்டாகிராமில், பாஸிட்டிவ் எனக் காட்டும் ப்ரக்னன்ஸி கிட்டையும் குழந்தைக்கான ரப்பர் நிப்பிளையும் ஷேர் செய்து "வொண்டர் ஆரம்பமாகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். மலையாளத்தில் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் பார்வதிக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். தமிழில் தனுஷ் நடித்த மரியான், பூ, பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்திலும் பார்வதி முக்கிய கேரக்டரில் இடம்பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. View this post on Instagram A post shared by Parvathy Thiruvothu (@par_vathy) இந்நிலையில் நடிகை பார்வதி, தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பாஸிட்டிவ் எனக் காட்டும் ப்ரக்னன்ஸி கிட்டையும் குழந்தைக்கான ரப்பர் நிப்பிளையும் ஷேர் செய்துள்ளார். மேலும் "வொண்டர் ஆரம்பமாகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார் பார்வதிக்கு இன்னும் திருமணமாகவில்லை என்ற காரணத்தினால், இந்தப் பதிவு அனைவருக்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதையும் படியுங்கள் - இரவெல்லாம் உங்களுக்கு தூக்கமில்லையா? உங்களுக்கு இந்த பிரச்னைகள் வரலாம்! பார்வதி கர்ப்பமாக இருப்பதாக நினைத்து பல ரசிகர்கள் வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து பகிர்ந்து வந்தனர். பார்வதியை தொடர்ந்து நடிகை நித்யாமேனனும் தனது இஸ்டாகிராமில் பாஸிட்டிவ் எனக் காட்டும் ப்ரக்னன்ஸி கிட் புகைப்படத்தை பகிர்ந்தார். உடனே சில ரசிகர்கள் நித்யாமேனனுக்கும் வாழ்த்துகள் தெரிவித்தனர். ஒரே புகைப்படத்தை நடிகைகள் பகிர்ந்ததால் ரசிகர்கள் குழப்பமடைந்த ரசிகர்கள் அதன்பின்பு புரோமோஷன் என்பதை ரசிகர்கள் புரிந்துகொண்டனர். 'ஒண்டர் வுமன்' திரைப்படத்துக்கான புரோமோஷனுக்காக படத்தை தான் நடிகை பார்வதியும், நித்யா மேனனும் பகிர்ந்துள்ளனர். பிரபல இயக்குனர் அஞ்சலி மேனன் இயக்கவுள்ள இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஒரு படம் புரோமோஷனுக்காக இப்படி எல்லாமா ரசிகர்களை குழப்பத்தில் தள்ளுவது என ரசிகர்கள் ஜாலியாக கிண்டல் செய்து வருகின்றனர்.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகை பார்வதியும், நித்யாமேனனும் தனது இன்ஸ்டாகிராமில், பாஸிட்டிவ் எனக் காட்டும் ப்ரக்னன்ஸி கிட்டையும் குழந்தைக்கான ரப்பர் நிப்பிளையும் ஷேர் செய்து "வொண்டர் ஆரம்பமாகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். மலையாளத்தில் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் பார்வதிக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். தமிழில் தனுஷ் நடித்த மரியான், பூ, பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்திலும் பார்வதி முக்கிய கேரக்டரில் இடம்பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. View this post on Instagram A post shared by Parvathy Thiruvothu (@par_vathy) இந்நிலையில் நடிகை பார்வதி, தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பாஸிட்டிவ் எனக் காட்டும் ப்ரக்னன்ஸி கிட்டையும் குழந்தைக்கான ரப்பர் நிப்பிளையும் ஷேர் செய்துள்ளார். மேலும் "வொண்டர் ஆரம்பமாகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார் பார்வதிக்கு இன்னும் திருமணமாகவில்லை என்ற காரணத்தினால், இந்தப் பதிவு அனைவருக்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியத...

வான்மதி-கோயமுத்தூர் மாப்ளே முதல் துணிவு-வாரிசு வரை - நேரடியாக மோதிய அஜித், விஜய் படங்கள் ரஜினிகாந்த் மற்றும் கமலுக்குப் பிறகு நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவருமே தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக இருந்து வருகின்றனர். குறிப்பாக இருவருமே பாக்ஸ் ஆபீஸ் வசூல் மன்னனாக இருப்பதால், இவர்கள் இருவரின் படங்களுக்கு அதிகளவிலான திரையரங்குகள் ஒதுக்கப்படுகின்றன. எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய் என்றுதான் தற்போது வரை கோலிவுட்டில் சொல்லப்படாத ஒரு பார்முலா சுற்றி வருகிறது. அதனால் கதையின் முக்கியத்துவத்தை விட இவர்கள் இருவரின் படங்களை இயக்கினால் போதும் என்று கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் இயக்குநர்கள் ஏராளம். ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்தாலும், அதன்பிறகு இருவரும் இணைந்து நடித்ததில்லை. எனினும், அவ்வவ்போது இருவரின் படங்கள் ஒரே சமயத்தில் திரையரங்குகளில் மோதும்போது ஒரு பெரிய பரபரப்பு இருக்கும். யார் வசூலில் சாதித்தது, எது நல்லப் படம் என்று பெரிய விவாதமே நடக்கும். அத்துடன் இவர்களின் ரசிகர்கள் மோதிக்கொள்ளுவதும் வாடிக்கையாக இருக்கும். இந்நிலையில், 8 வருடங்களுக்குப் பிறகு அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ ஆகியப் படங்கள் ஒரே நேரத்தில் பொங்கலுக்கு வெளிவருகின்றன. இதுவரை இருவரின் படங்கள் ஒரே சமயத்தில் வெளியானது பற்றி சிறு தொகுப்பாக பார்க்கலாம். 1. கோயமுத்தூர் மாப்ளே - வான்மதி அஜித்தின் ‘வான்மதி’ மற்றும் விஜயின் கோயம்புத்தூர் ‘மாப்ளே’ ஆகிய இரண்டுப் படங்கள் தான் முதன்முதலில் நேரடியாக மோதியப் படங்களாகும். இதில் ‘வான்மதி’ படம், பொங்கலை முன்னிட்டு கடந்த 1996-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி வெளியாகி 175 நாட்கள் ஓடியது. மேலும் வசூல் ரீதியாக இந்தப் படம் வெற்றிப்படமாக அஜித்திற்கு அமைந்தது. விஜய்யின் ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம், பொங்கலை முன்னிட்டு கடந்த 1996-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி வெளியானது. இந்தப் படமும் சூப்பர் ஹிட் படமாக அமைந்து வசூலை வாரிக் குவித்தது. கவுண்டமணியின் நகைச்சுவை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. அப்போதே இந்தப் படம் 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்தது. *அந்நாட்களில் அதிக நாட்கள் திரையரைங்கில் ஓடும் படமே வெற்றிப்படமாக பார்க்கப்பட்டது. 2. பூவே உனக்காக - கல்லூரி வாசல் நடிகர் விஜய்க்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்த இந்தப் படம் அதே 1996-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ம் தேதி வெளியானது. சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில், விக்ரமன் இயக்கத்தில் காதல், குடும்பம், சென்டிமெண்ட், நகைச்சுவை ஆகியவற்றை மையமாக வைத்து வித்தியாசமாக எடுக்கப்பட்ட இந்தப் படம் 250 நாட்களுக்கும் மேலாக திரையரங்கில் வெற்றிக்கரமாக ஓடியது. மேலும் இந்தப் படம் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. அஜித், பிரசாந்த், தேவயானி, பூஜா பட் நடிப்பில், பவித்ரன் இயக்கத்தில், கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பிரசாந்த் முதன்மை பாத்திரத்திலும், அஜித் இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. *நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ படம், ‘பூவே உனக்காக’ ஸ்டைலில்தான் இருக்கும் என்று ஏற்கனவே, அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 3. காதலுக்கு மரியாதை - ரெட்டை ஜடை வயசு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் ‘ரெட்டை ஜடை வயசு’ படம் 1997-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதியும் வெளியாகியது. சி. சிவக்குமார் இயக்கிய இந்தப் படத்தை பாக்யம் சினி கம்பைன்ஸ் தயாரித்து இருந்தது. சிறுநீரக தானம் பற்றி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், மந்த்ரா, கவுண்டமணி, செந்தில், பொன்வண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். எனினும் இந்தப் படம் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது. மலையாள இயக்குநர் ஃபாசில் இயக்கத்தில், சங்கிலி முருகன், வேணு ரவிச்சந்திரன் தயாரிப்பில் மீண்டும் காதல், குடும்பம் மற்றும் சென்டிமெண்ட் நிறைந்த படமாக விஜய்யின் ‘காதலுக்கு மரியாதை’ திரைப்படம் 1997-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ம் தேதி வெளியாகியது. ‘பூவே உனக்காக’ படம் போல் இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 150 நாட்களுக்கும் மேல் இந்தப் படம் ஓடியதுடன், தமிழ்நாடு மாநில விருதுகள் சிறப்பாக நடித்ததற்காக விஜய்க்கும், பாடல்களை எழுதிய பழனி பாரதிக்கும் கிடைத்தது. இந்தப் படத்தின் மூலம் தான் ஷாலினி கதாநாயகியாக அறிமுகமானார். 4. நிலாவே வா - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் சுதந்திர தினத்தை முன்னிட்டு கார்த்திக், ரோஜா, ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்திருந்த ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ படம், 1998 ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகியிருந்தது. இந்தப் படத்தில் அஜித் முக்கிய கதாபாத்திரத்தில் ஒருசில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தார். விக்ரமன் இயக்கிய இந்தப் படம் 200 நாட்களுக்கும் மேலாக வெற்றிக்கரமாக ஓடியது. அதேநேரத்தில் விஜய் நடிப்பில் கடந்த 1998-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியான ‘நிலாவே வா’ திரைப்படத்தை ஏ. வெங்கடேஷ் இயக்கி இருந்தார். கே.டி. குஞ்சுமோன் மற்றும் ஷோபா சந்திரசேகர் தயாரித்திருந்த இந்தத் திரைப்படம் வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படத்தில் விஜய் சோலோவாக நடித்திருந்தார். 5. துள்ளாத மனமும் துள்ளும் - உன்னைத் தேடி விஜய், சிம்ரன், மணிவண்ணன், தாமு, வையாபுரி ஆகியோர் நடிப்பில், கடந்த 1999-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘துள்ளாத மனமும் துள்ளும்’. எழிழ் இயக்கியிருந்த இந்தப் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் வரவேற்பு பெற்றநிலையில், 200 நாட்களுக்கும் மேலாக திரையரங்கில் ஓடி வசூலில் சாதனை புரிந்தது. விஜய் படம் வெளியாகி 7 நாட்கள் கழித்து, 1999-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி அஜித், மாளவிகா, சிவக்குமார், விவேக், கரண் நடிப்பில் வெளியான ‘உன்னைத் தேடி’ திரைப்படம் 100 நாட்கள் ஓடியது. இந்தப் படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார். லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது. 6. குஷி - உன்னைக் கொடு என்னை தருவேன் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில், ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரிப்பில், விஜய், ஜோதிகா, விவேக், மும்தாஜ் ஆகியோர் நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதி வெளியான திரைப்படம் ‘குஷி’. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அஜித், சிம்ரன், நாசர், பார்த்திபன், சுகன்யா, ராகவா லாரன்ஸ், மணிவண்ணன், சார்லி, சின்னி ஜெயந்த், தாமு ஆகியோர் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை. *ஒரேநாளில் இருவரின் படங்களும் மோதியிருந்தன. 7. ப்ரண்ட்ஸ் - தீனா பொங்கலை முன்னிட்டு மலையாள இயக்குநர் சித்திக் இயக்கத்தில், விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, தேவயானி, விஜயலட்சுமி, வடிவேலு நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி வெளியான திரைப்படம் ‘ப்ரண்ட்ஸ்’. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றளவும் ஈர்ப்பதாகவும், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பயனுள்ளதாகவும் அமைந்திருந்தது இந்தப் படம். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜயம் சினி கம்பைன்ஸ் தயாரிப்பில் அஜித், சுரேஷ் கோபி, லைலா ஆகியோர் நடித்திருந்த இந்தப் படமும் விஜய்யின் ‘ப்ரண்ட்ஸ்’ படத்துடன் நேரடியாக அதேநாளில் மோதியது. மாஸ் மற்றும் ஆக்ஷன் ஹீரோவாக அஜித் மாறுவதற்கு இந்தப் படம் தான் துணைப் புரிந்தது. பெரும்பாலான ரசிகர்களை கொடுத்தது இந்தப் படம் தான். மேலும் அஜித்துக்கு ‘தல’ என்றப் பெயரும் இந்தப் படத்தில் இருந்துதான் வந்தது. 8. பகவதி - வில்லன் தீபாவளியை முன்னிட்டு கடந்த 2002-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி வெளியான திரைப்படம் ‘பகவதி’ இந்தப் படத்தில் விஜய், ரீமா சென், ஜெய், வடிவேலு, ஆஷிஷ் வித்யார்த்தி நடிப்பில் உருவான இந்தப் படம் ஓரளவு மட்டுமே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை ஏ. வெங்கடேஷ் இயக்கியிருந்தார். அதேநேரத்தில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்த திரைப்படம் ‘வில்லன்’. இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியான நிலையில், விஜய்யின் ‘பகவதி’ படத்தை விட ‘வில்லன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 9. திருமலை - ஆஞ்சநேயா தொடர்ந்து தோல்விப் படங்களாக கொடுத்து வந்த விஜய்க்கு, திருப்புமுனையாகவும், மாஸ் ஹீரோவாகவும் அமைந்தப் படம் ‘திருமலை’. இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு 2003-ம் வருடம் அக்டோபர் 24-ம் தேதி வெளியானது. ஜோதிகா, ரகுவரன், கருணாஸ், விவேக், கௌசல்யா ஆகியோர் நடித்திருந்தனர். அதே தேதியில் வெளியான அஜித்தின் ‘ஆஞ்சநேயா’ படம் தோல்வியை தழுவியது. நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில், என் மஹாராஜன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் மீரா ஜாஸ்மின், ரகுவரன், சீதா, கிரிஷ் கர்னாட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 10. ஆதி - பரமசிவன் அஜித்தின் ‘பரமசிவன்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு, கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி வெளியானது. பி. வாசு இயக்கியிருந்த இந்தத் திரைப்படத்தில் லைலா, ஜெயராம், விவேக், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. அதேநேரத்தில் ஒருநாள் பின்னதாக 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி வெளியான ‘ஆதி’ திரைப்படம் பெரும் தோல்வியை தழுவியது. மீண்டும் ரமணா இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சாய்குமார், பிரகாஷ் ராஜ், நாசர், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 11. போக்கிரி - ஆழ்வார் பொங்கலை முன்னிட்டு கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி, பிரபுதேவா இயக்கத்தில், விஜய், அசின், வடிவேலு, பிரகாஷ் ராஜ், நாசர், ஸ்ரீமன், நெப்போலியன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘போக்கிரி’. காவல்துறை அதிகாரியாக விஜய் நடித்திருந்த இந்தப் படம், 200 நாட்களை கடந்து வெற்றிக்கரமாக ஓடியது. அஜித், அசின், கீர்த்தி சாவ்லா, விவேக், லால், மனோரமா ஆகியோர் நடிப்பில், கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி வெளியான திரைப்படம் ‘ஆழ்வார்’. இந்தப் படம் அந்த அளவு ரசிகர்களை கவரவில்லை. செல்லா அய்யாவு இந்தப் படத்தை இயக்கியிருந்தார். 12. ஜில்லா - வீரம் ஆர்.டி. நேசன் இயக்கத்தில், சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், பொங்கலை முன்னிட்டு கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி வெளியான திரைப்படம் ‘ஜில்லா’. விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி, நிவேதா தாமஸ், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. மீண்டும் காவல்துறை அதிகாரியாக விஜய் நடித்திருந்தார். சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித், தமன்னா, விதார்த், பாலா, சந்தானம், நாசர் ஆகியோர் நடிப்பில் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம், விஜய்யின் ‘ஜில்லா’ படத்தை விட வரவேற்புப் பெற்றது. கிராமத்து கதையில், அண்ணன் தம்பிகளின் பாசம் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுடன் பக்கா கமர்ஷியல் படமாக இருந்ததும் ஒரு காரணம். 13. வாரிசு - துணிவு தில் ராஜூ தயாரிப்பில், தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளப் படம் ‘வாரிசு’. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், குஷ்பு, சரத்குமார், ஷாம் உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிப்பில் பொங்கலையொட்டி வெளியாக உள்ளப் படம் ‘துணிவு’. இந்த இரண்டு படங்களும் பொங்கல் நேரத்தில் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டாலும், இதுவரை சரியான தேதி வெளியாகவில்லை. எனினும், இரு படங்களுமே வெற்றிப்பெற வேண்டும் என்று திரையுலகினர் எதிர்பார்த்துள்ளனர். கோயமுத்தூர் மாப்ளே - வான்மதி, ப்ரண்ட்ஸ் - தீனா, ஆதி - பரமசிவன், போக்கிரி - ஆழ்வார், ஜில்லா - வீரம் ஆகியப் படங்கள் பொங்கல் பண்டிகை நேரத்தில் நேரடியாக மோதியப் படங்களாகும். இதில் தற்போது வாரிசு - துணிவு படங்களும் சேர்ந்துள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
ரஜினிகாந்த் மற்றும் கமலுக்குப் பிறகு நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவருமே தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக இருந்து வருகின்றனர். குறிப்பாக இருவருமே பாக்ஸ் ஆபீஸ் வசூல் மன்னனாக இருப்பதால், இவர்கள் இருவரின் படங்களுக்கு அதிகளவிலான திரையரங்குகள் ஒதுக்கப்படுகின்றன. எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய் என்றுதான் தற்போது வரை கோலிவுட்டில் சொல்லப்படாத ஒரு பார்முலா சுற்றி வருகிறது. அதனால் கதையின் முக்கியத்துவத்தை விட இவர்கள் இருவரின் படங்களை இயக்கினால் போதும் என்று கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் இயக்குநர்கள் ஏராளம். ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்தாலும், அதன்பிறகு இருவரும் இணைந்து நடித்ததில்லை. எனினும், அவ்வவ்போது இருவரின் படங்கள் ஒரே சமயத்தில் திரையரங்குகளில் மோதும்போது ஒரு பெரிய பரபரப்பு இருக்கும். யார் வசூலில் சாதித்தது, எது நல்லப் படம் என்று பெரிய விவாதமே நடக்கும். அத்துடன் இவர்களின் ரசிகர்கள் மோதிக்கொள்ளுவதும் வாடிக்கையாக இருக்கும். இந்நிலையில், 8 வருடங்களுக்குப் பிறகு அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ ஆகியப் படங்கள் ஒரே ந...

இயக்குநர் ஆர்.கே. செல்வமணியின் கார் கண்ணாடி உடைப்பு - முன்விரோதம் காரணமா என விசாரணை தமிழ் திரைப்பட இயக்குநர் ஆர். கே. செல்வமணியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள கண்ணாம்மாள் தெருவில் திரைப்பட இயக்குநர் ஆர். கே. செல்வமணி தனது இன்னோவா காரை நிறுத்து வைத்துவிட்டு வேலை நிமித்தமாக வெளியே சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்தபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை ஆட்டோவில் வந்த மர்மநபர் கற்களை வீசி கார் கண்ணாடியை சேதப்படுத்தி உள்ளார். இதனைப் பார்த்து இயக்குநர் ஆர்.கே. செல்வமணி அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் உடனடியாக இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகார் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார், சிசிடிவி காட்சி பதிவுகளை எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திரைப்பட இயக்குநர் சங்கம் மற்றும் ஃபெஃப்சி சங்கத்தின் தலைவராக ஆர்.கே. செல்வமணி இருப்பதால், அதில் முன் விரோதம் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தமிழ் திரைப்பட இயக்குநர் ஆர். கே. செல்வமணியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள கண்ணாம்மாள் தெருவில் திரைப்பட இயக்குநர் ஆர். கே. செல்வமணி தனது இன்னோவா காரை நிறுத்து வைத்துவிட்டு வேலை நிமித்தமாக வெளியே சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்தபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை ஆட்டோவில் வந்த மர்மநபர் கற்களை வீசி கார் கண்ணாடியை சேதப்படுத்தி உள்ளார். இதனைப் பார்த்து இயக்குநர் ஆர்.கே. செல்வமணி அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் உடனடியாக இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகார் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார், சிசிடிவி காட்சி பதிவுகளை எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திரைப்பட இயக்குநர் சங்கம் மற்றும் ஃபெஃப்சி சங்கத்தின் தலைவராக ஆர்.கே. செல்வமணி இருப்பதால், அதில் முன் விரோதம் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaim...

அடுத்தடுத்து வெளியான ரஜினியின் ‘ஜெயிலர்’, ‘தலைவர் 170’ படங்கள் குறித்த அப்டேட் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ ரிலீஸ் தேதி குறித்த தகவல் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் உடனான ‘தலைவர் 170’ படத்துக்கான பூஜை ஆகியவை பற்றிய அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன. ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக ரஜினிகாந்த் நடித்து வரும்நிலையில், கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் தமன்னா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கடலூரில் நடைபெற்று வந்தது. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்புகளை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ரஜினியின் 169 படமாக உருவாகி வரும்நிலையில், அட்டவணையின் படி படப்பிடிப்பு குறிப்பிட்ட தேதியில் முடிவடைந்தால் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 14-ம் தேதி இந்தப் படத்தை வெளியிட படக்குழு யோசித்து வருவதாக ‘பிங்க்வில்லா’ இணைய செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழ் புத்தாண்டு அன்று சன் பிக்சர்ஸின் துவங்கப்பட்ட தினம் என்பதால் கொண்டாட்டமாக அமையும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று மேலும், இந்தப் படம் முடிந்தப் பிறகு லைகா தயாரிப்பில் 2 படங்கள் நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். அதில் ஒரு படத்திற்கான பூஜை, வரும் நவம்பர் 5-ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இத்தகவலை லைகா தலைமை நிர்வாகி தமிழ் குமரன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் விரைவில் ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பை துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ ரிலீஸ் தேதி குறித்த தகவல் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் உடனான ‘தலைவர் 170’ படத்துக்கான பூஜை ஆகியவை பற்றிய அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன. ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக ரஜினிகாந்த் நடித்து வரும்நிலையில், கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் தமன்னா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கடலூரில் நடைபெற்று வந்தது. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்புகளை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ரஜினியின் 169 படமாக உருவாகி வரும்நிலையில், அட்டவணையின் படி படப்பிடிப்பு குறிப்பிட்ட தேதியில் முடிவடைந்தால் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 14-ம் தேதி இந்தப் படத்தை வெளியிட படக்குழு யோசித்து வருவதாக ‘பிங்க்வில்லா’ இணைய செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழ் புத்தாண்டு அன்று சன் பிக்சர்...

ஓடிடியில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ - ஆனாலும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்... என்னென்ன? ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. எனினும் அதனைப் பார்க்க வேண்டுமென்றால் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் தற்போதும் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையிலும், படம் வெளியாகி ஒரு மாதத்தை நிறைவு செய்ய உள்ளதால், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஹெச்டி தரத்தில் இன்று வெளியாகியுள்ளது. எனினும் தற்போது சந்தாதாரர்கள் அனைவரும் பார்க்க முடியாது. தற்போது படம் பார்க்க வேண்டுமென்றால் அமேசான் பிரைம் ஓடிடியில் அதன் சந்தாதாரர்கள் உள்பட அனைவரும் ரூ. 199 கட்டணம் செலுத்தித்தான் பார்க்கமுடியும். ரூ. 199 செலுத்திய தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும். மேலும் படம் பார்க்க ஆரம்பித்த 48 மணி நேரத்துத்துக்குள் படத்தைப் பார்த்து முடித்துவிட வேண்டும். படத்தைப் பதிவிறக்கம் செய்ய முடியாது. மேலும் அடுத்த 7 நாள்களில் அமேசான் பிரைம் ஓடிடியில் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நவம்பர் 4-ம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் படம் வெளியாகவுள்ளது. அப்போது அமேசான் பிரைம் சந்தாதாரர்களால் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்தாமல் ‘பொன்னியின் செல்வன்’ படத்தைப் பார்க்க முடியும். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் 30-ம் தேதி வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம், 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. எனினும் அதனைப் பார்க்க வேண்டுமென்றால் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் தற்போதும் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையிலும், படம் வெளியாகி ஒரு மாதத்தை நிறைவு செய்ய உள்ளதால், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஹெச்டி தரத்தில் இன்று வெளியாகியுள்ளது. எனினும் தற்போது சந்தாதாரர்கள் அனைவரும் பார்க்க முடியாது. தற்போது படம் பார்க்க வேண்டுமென்றால் அமேசான் பிரைம் ஓடிடியில் அதன் சந்தாதாரர்கள் உள்பட அனைவரும் ரூ. 199 கட்டணம் செலுத்தித்தான் பார்க்கமுடியும். ரூ. 199 செலுத்திய தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும். மேலும் படம் பார்க்க ஆரம்பித்த 48 மணி நேரத்துத்துக்குள் படத்தைப் பார்த்து முடித்துவிட வேண்டும். படத்தைப் பதிவிறக்கம் செய்ய முடியாது. மேலும் அடுத்த 7 நாள்களில் அமேசான் பிரைம் ஓடிடியில் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நவம்பர் 4-ம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் படம் வெளியாகவுள்ளது. அப்போது ...

”கோவம் வந்தா கைநீட்டுவாரா?”.. சுயமரியாதைக்காரி ’அம்மு’வுக்கு.. ஒரு ராயல் சல்யூட்! சுயமரியாதைக்காரி அம்மு. முன்கதை பின்கதை இல்லாமல் நேரடியாகவே சொல்கிறோம். அம்மு பேசுவது, குடும்ப வன்முறையை. கணவனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஒரு பெண், என்ன செய்ய வேண்டும் என்பதுதான் அம்முவின் குரல். படத்தில் ஒவ்வொரு காட்சியுமே முக்கியமான காட்சிகள்தான் என்றபோதிலும் இரண்டாம்பாதியை விடவும், முதல்பாதிதான் நமக்கு மிகப்பெரிய வலியை கொடுக்கிறது. அம்மு, தான் குடும்ப வன்முறைக்கு உட்படுவதை, கொஞ்சம் கொஞ்சமாக உணரத்தொடங்கும் அந்தக் காட்சிகள், பார்ப்போரையும்கூட பதைபதைக்க வைக்கிறது. அம்முவில் பாராட்டவும் பதைபதைக்கவும் ஏராளமான விஷயங்கள் இருக்கிறது என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், படத்தில் பேசப்படும் முக்கியமான வசனங்களை இங்கு பட்டியலிட விரும்புகிறோம். அதனூடே, படத்தின் விமர்சனமும் இங்கு அமையும். ஆகவே, ஸ்பாய்லர்கள் உண்டு. திருமணமாகிய முதல் சில வாரங்கள் மிக மகிழ்ச்சியாகவே போகிறது அம்முவின் வாழ்க்கை. அத்தனை மாதங்கள் கணவரிடமிருந்து முத்தத்தை மட்டுமே பெற்ற அம்முவின் கன்னத்தில், ஒரு நாளில் முதன்முதலில் அறையொன்று கிடைக்கிறது. எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் தவிக்கும் அம்மு, தன் தாயிடம் அதை சொல்கிறார். இதைக்கேட்டவுடன், தன் மகளிடம் `நீ என்ன செஞ்ச? என கேட்கிறார் அந்த தாய். அம்மு வேகமாக, `நான் தான் தப்பு செஞ்சிருப்பேன்னு எப்படிம்மா நீ முடிவு பண்ணுன? அப்போ நான் தப்பு பண்ணிருந்தா, அவர் என்னை அடிக்கலாமா’ என்று கேட்கிறாள் அம்மு. பின் அந்த அம்மாவே அம்முவின் நிலை புரிந்து அவளிடம் ஒரு விஷயத்தை சொல்கிறார். படத்தின் மிக முக்கியமான வசனமும் கருத்தும் இதுதான். அம்முவின் அம்மா சொல்கிறார்: “உன்னோட அப்பா என்னை ஒருமுறை அடிச்சிருக்கிறார். அப்போ என்னோட அம்மா எங்கிட்ட `புருஷங்கிறவன் அடிக்கத்தான் செய்வான். இதுவொன்னும் புதுசா உனக்கு மட்டும் நடக்கல. உன் புருஷன் உன்னை மறுபடியும் அடிக்கிறதுக்கும் வாய்ப்பிருக்கு. இதை எந்தக் காலத்துலயும் நிறுத்தவும் முடியாது. ஆம்பளைங்களுக்கு கோவம் வரத்தான் செய்யும். ஏன்னா, அவன் வேலைக்கு போவான்; 1,008 டென்ஷன் இருக்கும். அப்போ அந்த டென்ஷனை யார்மேல காட்ட முடியும்? நம்ம மேல தான் கோவப்படுவாங்க. மொத்த காதலும் உனக்குதான் வேணும்னு நினைக்கிறள்ல… அப்போ மொத்த வலியையும் நீதான் ஏத்துக்கணும். ஒரு குழந்தை பிறந்தா, எல்லா பிரச்னையும் சரியாகிடும்’னு சொன்னாங்க. ஆனா எங்க அம்மா எனக்கு இதையெல்லாம் சொல்லிருக்கக்கூடாது. இதுக்கு பதிலா என்னோட அம்மா எங்கிட்ட `ஆண் என்பவன், தன்னோட மனைவிமேல கைநீட்டக்கூடாது. ஒருவேளை அவன் அடிச்சான்னா, அவன்கூட வாழ வேண்டிய கட்டாயம் அந்தப் பொண்ணுக்கு கிடையாது’னு சொல்லிருக்கணும். நான் உங்கிட்ட இதையே சொல்றேன். அம்மு, உனக்கு எது சரின்னு தோணுதோ அதை செய்” என்கிறார். இந்தியாவில் குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண் ஒவ்வொருவருக்கும், அவர்களின் தாய்மார்கள் சொல்லவேண்டிய மிக அழுத்தமான விஷயம் இது. அதை அம்மு அவ்வளவு நேர்த்தியாகவும் நியாமாகவும் அறத்தோடும் பேசியிருக்கிறது. இதற்காகவே `அம்மு’வை எழுதி இயக்கிய சாருகேஷ் சேகருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். படத்தில் இப்படி இன்னும் நிறைய அழுத்தமான வசனங்கள் உள்ளன. குறிப்பாக, தான் பாதிக்கப்படுகிறோம் என்பதை அம்மு உணர்கையில், அவள் சொல்வது `எனக்கே என் மேல மரியாதை இல்லாம போச்சு. அவர் என்ன பண்ணாலும், பொறுத்துக்கிட்டு ஒரு ஓரமா இருக்கேன்’ என சொல்வது நமக்குள்ளும் வலியை கடத்துகிறது. படத்தின் இண்டெர்வெல் ப்ளாக்கில், அம்முவுக்கு தான் மட்டுமே தன்னுடைய பிரச்னைகளுக்கு தீர்வு என்பது புரிகிறது. அப்போது அவர் சொல்வது - `இனிமே நான் சும்மாருக்க மாட்டேன். எவனாவது வந்து என்னை காப்பாத்துவான்னு உட்கார்ந்துகிட்டு இருக்க முடியாது. எதாவது நடக்கனும்னா, நான் தான் எதாவது பண்ணனும்’ என்கிறார். அதற்குப்பின் அம்மு தொடுவதெல்லாம் அதிரடிதான். அதிரடி என்றவுடன், இவரும் அடிப்பரென நினைத்துவிடாதீர்கள். தெலுங்கு படமென்றாலும்கூட, இப்படத்தில் அப்படி நம்ப முடியாத காட்சிகளே கிடையாது. அம்மு, அந்தப் புரிதலுக்குப் தன் கணவனுக்கு பாடம் புகட்டுகிறாள். `இனி என் மேல் மட்டுமில்ல, வேற யார் மேலயும் கை நீட்டக்கூடாது’ என அறச்சீற்றம் கொள்கிறாள். அங்கிருந்து தன்னை தானே மீட்க தொடங்குகிறார் அவர். இடையே நிறைய ட்விஸ்ட்களும் படத்தில் உள்ளது. பாபி சிம்ஹா வருகிறார்... போலீஸ் நிலைய காட்சிகள் வருகின்றன... முகமூடி போட்ட கணவரின் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாக கழன்று விழுகிறது என்றிருக்க, அந்த நிலையில்தான் அம்மு கருவுறுகிறாள். அந்த தருணத்தில், பெண் உடல் மீது நிகழும் அரசியலையும் அம்மு பேசுகிறாள். அந்தக் குழந்தையை பெற்றெடுப்பதா, வேண்டாமா என்பதற்கு அம்மு எடுக்கும் முடிவுக்கு, இன்னொரு அப்ளாஸ். பொதுவாக குடும்ப வன்முறையென்பது, ஒரு நொடியில் தொடங்குவதில்லை. அதற்கு சில படிநிலைகள் இருக்கிறது. அதை அம்மு படக்குழு, மிக சென்சிட்டிவாக கையாண்டிருப்பது, மிகச்சிறப்பான விஷயம். குறிப்பாக அம்மு தன்னை தானே குற்றப்படுத்திக்கொள்ளும் சில காட்சிகள் அத்தனை எதார்த்தமாக இருக்கிறது. ரயில்வே ஸ்டேஷனில் உட்கார்ந்துக்கொண்டு, பிச்சைக்காரர் ஒருவரிடம் `அடி வாங்குற அளவுக்கு நான் என்ன செஞ்சேன்னே எனக்கு தெரில. எனக்கு தெரிஞ்சதெலாம், வெக்கமே இல்லாம அடிவாங்கிட்டு உட்கார்ந்து அழுவுறது. ச்ச… தப்பே பண்ணலைன்னாகூட, என்னை நானே திட்டிகிட்டே இருக்கேன். நான் ஏன் இப்படி இருக்கேன்? முதல்ல அவருக்கு ஏன் இவ்ளோ கோவம் வருது? கோவம் வந்தா கைநீட்டுவாரா? ஆனா அவர் கெட்டவர்னு கிடையாது… அரக்கன்னும் கிடையாது. என்னை ரொம்ப நல்லா பாத்துக்குவாரு. என்மேல அவருக்கு காதல் இல்லனுலாம் சொல்லமுடியாது.  அப்பப்போ அவரை சுற்றி நடக்குற விஷயங்களால அவர் டென்ஷனாகி அப்படி பண்றாரு. அதனால இது முழுசா அவரோட தப்புன்னு சொல்லிட முடியாது. ஆனா என் மனசு இதை ஒத்துக்க மாட்டேங்குது. தினமும் இப்படியெல்லாம் நடக்காது. நிறைய நாள் நாங்க நல்லாதான் இருப்போம். யோசிச்சு பார்த்தா, மேக்சிமம் நாங்க நல்லாதான் இருப்போம். எப்பயாவது பிரச்னை வருதுன்னு நாம விட்டுட்டு போயிட்டா தப்புதானே? இதலாம் சகிச்சுகிட்டு நான் அவர்கிட்ட அன்பா இருந்தா, அவர் ஏதோ ஒரு நாள் திருந்துவாருல்ல… அவர் என்னை வலியே கொடுக்க முடியாத அளவுக்கு காதலிக்கணும். அந்தளவுக்கு அவர் என்னை லவ் பண்ணா போதும். அவர்தான் என்னோட உலகம்’ என்கிறார் அம்மு. இத்தனை குற்ற உணர்ச்சிக்குப் பின்னர்தான் அம்மு சீறிப்பாய்கிறாள். அதுவும் க்ளைமாக்ஸில் வைக்கப்பட்ட ட்விஸ்ட், மனசை விட்டு நீங்காதபடி இருக்கிறது. அம்முவாக ஐஷ்வர்ய லட்சுமி. ஒவ்வொரு உணர்ச்சியையும் அவ்வளவு நேர்த்தியாக கையாள்கிறார். திருமணத்துக்குப் பின் அள்ள அள்ள குறையாத அளவுக்கு கணவனுக்கு காதலை வழங்குவது – படுக்கையறையில் கொச்சைப்படுத்தும் வார்த்தைகளை சகிப்பது - முதல்முறை கணவனை கோபத்தை காணும்போது செய்வதறியாமல் திகைப்பது – நடுவழியில் கணவனால் தனித்துவிடப்படும்போது கையில் காசின்றி ஆளில்லா சாலையில் நிற்பது – மூஞ்சுக்கு நேரே வரும் விசிறியெறியப்பட்ட தட்டை கண்டு ஒளிவது என சின்ன சின்னதாக தொடங்கி, படுக்கையறையில் பெல்ட்டில் அடிவாங்குவது வரை நம்மை உரையவைக்கிறார். க்ளைமாஸில் `உன்னை பார்த்து எனக்கு பயம் இல்ல’ என தன்னை அப்யூஸ் செய்தவனிடம் தைரியமாக பேசுவது என திரையிலும் நம் மனதிலும் நிறைந்திருக்கிறார். சொல்லப்போனால், நிமிர வைக்கிறார். அம்மு மட்டுமன்றி, படத்தில் இருக்கும் அத்தனை கதாபாத்திர வடிவமைப்புமே இந்த சென்சிடிவ்வான விஷயத்தை, நேர்த்தியாக கையாள்கிறது. கணவராக நடித்திருக்கும் நவீன் சந்திராவும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். இவர்களுடன் பாபி சிம்ஹா, சத்யா கிருஷ்ணன், அஞ்சலி அமீர், ரகு பாபு உள்ளிட்டோரும் நம் கவனத்தை ஈர்க்கின்றனர். என்னடா இது, படத்தை அப்படியே இங்கேயே சொல்லிட்டீங்களே என நினைக்க வேண்டாம். இதையும் விட அழுத்தமாக, இரண்டாம் பாதியில் ஏராளமான விஷயங்களை செய்கிறாள் அம்மு. அம்மு பேசும் அரசியல் மிக முக்கியமானது. `அம்மு’ படத்தை, நல்ல படம் என சொல்வதை விட, உங்களை சற்று நிலைகுலைய வைக்கும் படமென்று சொல்லலாம். அம்மு, மனதை விட்டு நீங்காமல் நம்மை தொந்தரவு செய்வாள். அம்மு செய்யும் அந்த தொந்தரவு, ஒவ்வொருவரும் பெற வேண்டியது. ஏனெனில் இந்தியாவில் இன்னும் இன்றும் நிறைய அம்முக்கள் இருக்கிறார்கள். அவர்களும், அவர்களை சார்ந்த நாமும் மிஸ் பண்ணாம நிச்சயமா பார்க்க வேண்டிய படம் அம்மு. படம், தமிழில் அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது. இதை வாசிக்கும், ஒவ்வொரு பெண்ணுக்கும் அம்முவோடு சேர்ந்து நாங்களும் சொல்கிறோம். `சரியோ தப்போ. உங்களோட எந்தவொரு முடிவையும், வேற யாரையும் எடுக்க விடாதீங்க. இது உங்க லைஃப். உங்க உடல். நீங்கதான் உங்களுக்கான முடிவுகளை எடுக்கணும்’. டாட். - ஜெ.நிவேதா Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
சுயமரியாதைக்காரி அம்மு. முன்கதை பின்கதை இல்லாமல் நேரடியாகவே சொல்கிறோம். அம்மு பேசுவது, குடும்ப வன்முறையை. கணவனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஒரு பெண், என்ன செய்ய வேண்டும் என்பதுதான் அம்முவின் குரல். படத்தில் ஒவ்வொரு காட்சியுமே முக்கியமான காட்சிகள்தான் என்றபோதிலும் இரண்டாம்பாதியை விடவும், முதல்பாதிதான் நமக்கு மிகப்பெரிய வலியை கொடுக்கிறது. அம்மு, தான் குடும்ப வன்முறைக்கு உட்படுவதை, கொஞ்சம் கொஞ்சமாக உணரத்தொடங்கும் அந்தக் காட்சிகள், பார்ப்போரையும்கூட பதைபதைக்க வைக்கிறது. அம்முவில் பாராட்டவும் பதைபதைக்கவும் ஏராளமான விஷயங்கள் இருக்கிறது என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், படத்தில் பேசப்படும் முக்கியமான வசனங்களை இங்கு பட்டியலிட விரும்புகிறோம். அதனூடே, படத்தின் விமர்சனமும் இங்கு அமையும். ஆகவே,  ஸ்பாய்லர்கள் உண்டு. திருமணமாகிய முதல் சில வாரங்கள் மிக மகிழ்ச்சியாகவே போகிறது அம்முவின் வாழ்க்கை. அத்தனை மாதங்கள் கணவரிடமிருந்து முத்தத்தை மட்டுமே பெற்ற அம்முவின் கன்னத்தில், ஒரு நாளில் முதன்முதலில் அறையொன்று கிடைக்கிறது. எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் ...

இது அஜித்தின் 'துணிவு' பொங்கல் - தமிழகத்தில் ரிலீஸ் செய்வது யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு நடிகர் அஜித்தின் ‘துணிவு’ படத்தின் படம், பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் போனி கபூர் தயாரிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘துணிவு’. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது தெரிவித்துள்ளது. இதுபற்றி தயாரிப்பாளர் போனி கபூர் போட்டிருக்கும் ட்வீட்டின்படி, இப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இப்படத்தின் தமிழ்நாடு விநியொகத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் பெற்றுள்ளார். ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸூம், தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சியும் பெற்றிருக்கிறது.   2023 பொங்கலுக்கு, நடிகர் அஜித்தின் துணிவு படம் மட்டுமன்றி இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'வாரிசு' படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. வாரிசு படத்தில், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் படத்தின் வியாபார பணிகளை தயாரிப்பாளர் தில் ராஜு தொடங்கினார். வாரிசு படத்தின் தமிழ்நாட்டு விநியோக உரிமையை 'மாஸ்டர்' படத்தின் இணை தயாரிப்பாளரும், செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எஸ்.லலித் குமார் வாங்கியுள்ளார்.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போகும் 'தளபதி 67' படத்தையும் இவரே தயாரிக்கவிருக்கிறார்.  மாஸ்டர், வாரிசு மற்றும் தளபதி 67 என விஜய்யின் அடுத்தடுத்த  மூன்று படங்களிலும் செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் பங்காற்றுவது குறிப்பிடத்தக்கது. ஆக, இந்த பொங்கலுக்கு விஜய் – அஜித் படங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வது, கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க உள்ளது. கடைசியாக ஜில்லா – வீரம் படங்கள் ஒரேநேரத்தில் ரிலீஸ் ஆகின. அதற்குப்பிறகு இப்போதுதான் இரண்டு பேரின் படங்களும் ஒன்றாக ரிலீஸாகிறது. இதையடுத்து இருவரின் ரசிகர்களும் உற்சாகமாகியுள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் அஜித்தின் ‘துணிவு’ படத்தின் படம், பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் போனி கபூர் தயாரிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘துணிவு’. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது தெரிவித்துள்ளது. இதுபற்றி தயாரிப்பாளர் போனி கபூர் போட்டிருக்கும் ட்வீட்டின்படி, இப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இப்படத்தின் தமிழ்நாடு விநியொகத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் பெற்றுள்ளார். ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸூம், தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சியும் பெற்றிருக்கிறது.   2023 பொங்கலுக்கு, நடிகர் அஜித்தின் துணிவு படம் மட்டுமன்றி இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'வாரிசு' படமும் வெளியாகவுள்ளது...

‘பொன்னியின் செல்வன்’ இசைக் குழுவினருடன் வெற்றிக் கொண்டாட்டம் - வைரலாகும் புகைப்படங்கள்! ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் வெற்றியை அப்படத்தின் இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர், படத்தின் இசைக்குழுவுடன் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக திரைப்படமாக எடுத்துள்ளார். இதில் முதல் பாகம் கடந்த மாதம் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தீபாவளியை முன்னிட்டு வெளியான கார்த்தியின் ‘சர்தார்’, சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படங்களை தாண்டியும், ஒருமாதம் நிறைவடைய உள்ள நிலையிலும் தற்போதும் இந்தப் படத்திற்கான வரவேற்பு குறையவே இல்லை. இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் படத்தின் இசைக்குழுவுடன் இந்தப் படத்தின் வெற்றியை கொண்டாடினர். படத்திற்கு மிக முக்கிய பலமாகவும் படத்தை வெறோரு தளத்திற்கு கொண்டுபோனதற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்தப் படத்தில் பணியாற்றிய இசைக் குழு தான். அதனால், அவர்களுக்கு நேற்றிரவு சிறப்பான விருந்து அளித்து வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தில் பணியாற்றிய இசைக் கலைஞர்கள், பின்னணி பாடகர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவின் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. இதுவரை இந்தப் படம் 480 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #PonniyinSelvan success party happened yesterday night with music team The movie deserves the biggest success meet with full cast & crew  pic.twitter.com/u9fhvmrZJW — AmuthaBharathi (@CinemaWithAB) October 27, 2022 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் வெற்றியை அப்படத்தின் இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர், படத்தின் இசைக்குழுவுடன் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக திரைப்படமாக எடுத்துள்ளார். இதில் முதல் பாகம் கடந்த மாதம் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தீபாவளியை முன்னிட்டு வெளியான கார்த்தியின் ‘சர்தார்’, சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படங்களை தாண்டியும், ஒருமாதம் நிறைவடைய உள்ள நிலையிலும் தற்போதும் இந்தப் படத்திற்கான வரவேற்பு குறையவே இல்லை. இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் படத்தின் இசைக்குழுவுடன் இந்தப் படத்தின் வெற்றியை கொண்டாடினர். படத்திற்கு மிக முக்கிய பலமாகவும் படத்தை வெறோரு தளத்திற்கு கொண்டுபோனதற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்தப் படத்தில் பணியாற்றிய இசைக் குழு தான். அதனால், அவர்களுக்கு நேற்றிரவு சிறப்பான விருந்து அளித்து வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தில் பணியாற்றிய இசைக் கலைஞர்கள், பின்னணி பாடகர்கள் என அனைவரும் கலந...