நடிகை மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டார். அவருக்கு நுரையீரல் மற்றும் இருதயம் ஏற்கெனவே செயலிழந்து விட்டது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு சில வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காமல் போகவே, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய இயலவில்லை. எக்மோ கருவியில் உயிர் வாழ்ந்து வந்த அவர் உடலின் பிற உறுப்புகளும் ஒவ்வொன்றாக செயலிழந்து போக சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை மீனா - வித்யா சாகர் தம்பதிக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். நடிகை மீனாவில் கணவர் உயிரிழந்துள்ளது திரையிலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டார்.
அவருக்கு நுரையீரல் மற்றும் இருதயம் ஏற்கெனவே செயலிழந்து விட்டது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு சில வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு உறுப்புகள் கிடைக்காமல் போகவே, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய இயலவில்லை. எக்மோ கருவியில் உயிர் வாழ்ந்து வந்த அவர் உடலின் பிற உறுப்புகளும் ஒவ்வொன்றாக செயலிழந்து போக சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை மீனா - வித்யா சாகர் தம்பதிக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். நடிகை மீனாவில் கணவர் உயிரிழந்துள்ளது திரையிலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/huWd8JS
via IFTTT
Comments
Post a Comment