"சினிமாவில் நான் முத்தமிடுவதை என் மகள் விரும்பவில்லை" - நடிகர் விவேக் ஓபராய் அம்மா அல்லாத ஒருவரை முத்தமிடுவது எனக்குப் பிடிக்கவில்லை என்று தனது மகள் தன்னிடம் கூறியதாக நடிகர் விவேக் ஓபராய் கூறியுள்ளார். தனது சிறப்பான நடிப்பின் மூலம் பாலிவுட் திரை உலகில் பல கோடி ரசிகர்களை கொண்டு இன்றுவரை மிகச்சிறந்த நாயகனாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விவேக் ஓபராய். பாலிவுட் திரையுலகில் 20 வருடத்தை நிறைவு செய்த நடிகர் விவேக் ஓபராய் 'இந்தியா டுடே' உடனான நேர்காணலில் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம்திறந்து பேசினார். அப்போது அவர் திரையில் தனது மனைவி அல்லாத வேறொருவரை முத்தமிடுவது தனது மகளுக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்தார். அந்த பேட்டியில் நடிகர் விவேக் ஓபராய் கூறுகையில், ''என் மகன் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தான். "நீங்கள் இந்த பைக் ஸ்டண்ட்ஸ் எல்லாம் செய்தீர்களா? என்றான். என் இளைய மகள் என்னிடம் வந்து, 'அப்பா, நீங்கள் அம்மா அல்லாத ஒருவரை முத்தமிடுவது எனக்குப் பிடிக்கவில்லை. அம்மா அல்லாத இன்னொருவரை முத்தமிட உங்களுக்கு அனுமதி இல்லை' என்றாள். கொரோனாவின் போதுதான் என்னுடைய பிள்ளைகளுக்கு உட்கார்ந்து என்னிடம் இதுபோன்ற கேள்விகளைக் கேட்க அவர்களுக்கு நேரம் கிடைத்தது. மக்கள் ஏன் என்னை போட்டோ எடுக்கிறார்கள், ஏன் மக்கள் வந்து ஆட்டோகிராப் எடுக்க விரும்புகிறார்கள் என்று அவர்கள் கேட்டனர். உங்களுடன் செல்ஃபி எடுத்தவர்களை உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் உங்கள் நண்பர்களா? என்று அவர்கள் குழந்தைத்தனமாக கேட்டார்கள். பின்னர் நான் அவர்களுக்கு எனது ரசிகர்கள் பட்டாளம், திரையுலக புகழ் வெளிச்சம் குறித்து விளக்கிக் கூறினேன். அவர்கள் அதை மெதுவாக புரிந்துகொண்டனர்" என்று விவேக் ஓபராய் கூறினார். நடிகர் விவேக் ஓபராய் - பிரியங்கா ஆல்வா தம்பதியருக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு விவான் வீரு என்கிற 9 வயது மகனும், அமேயா நிர்வாணா என்கிற 7 வயது மகளும் உள்ளனர். இதையும் படிக்க: மிரட்டல் `மெகாஸ்டார் - மெகா பவர்ஸ்டார்’ காம்போ! வெளியானது சிரஞ்சீவி - ராம்சரணின் ஆச்சார்யா Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

அம்மா அல்லாத ஒருவரை முத்தமிடுவது எனக்குப் பிடிக்கவில்லை என்று தனது மகள் தன்னிடம் கூறியதாக நடிகர் விவேக் ஓபராய் கூறியுள்ளார்.
தனது சிறப்பான நடிப்பின் மூலம் பாலிவுட் திரை உலகில் பல கோடி ரசிகர்களை கொண்டு இன்றுவரை மிகச்சிறந்த நாயகனாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விவேக் ஓபராய். பாலிவுட் திரையுலகில் 20 வருடத்தை நிறைவு செய்த நடிகர் விவேக் ஓபராய் 'இந்தியா டுடே' உடனான நேர்காணலில் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம்திறந்து பேசினார். அப்போது அவர் திரையில் தனது மனைவி அல்லாத வேறொருவரை முத்தமிடுவது தனது மகளுக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்தார்.
அந்த பேட்டியில் நடிகர் விவேக் ஓபராய் கூறுகையில், ''என் மகன் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தான். "நீங்கள் இந்த பைக் ஸ்டண்ட்ஸ் எல்லாம் செய்தீர்களா? என்றான். என் இளைய மகள் என்னிடம் வந்து, 'அப்பா, நீங்கள் அம்மா அல்லாத ஒருவரை முத்தமிடுவது எனக்குப் பிடிக்கவில்லை. அம்மா அல்லாத இன்னொருவரை முத்தமிட உங்களுக்கு அனுமதி இல்லை' என்றாள்.

கொரோனாவின் போதுதான் என்னுடைய பிள்ளைகளுக்கு உட்கார்ந்து என்னிடம் இதுபோன்ற கேள்விகளைக் கேட்க அவர்களுக்கு நேரம் கிடைத்தது. மக்கள் ஏன் என்னை போட்டோ எடுக்கிறார்கள், ஏன் மக்கள் வந்து ஆட்டோகிராப் எடுக்க விரும்புகிறார்கள் என்று அவர்கள் கேட்டனர். உங்களுடன் செல்ஃபி எடுத்தவர்களை உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் உங்கள் நண்பர்களா? என்று அவர்கள் குழந்தைத்தனமாக கேட்டார்கள். பின்னர் நான் அவர்களுக்கு எனது ரசிகர்கள் பட்டாளம், திரையுலக புகழ் வெளிச்சம் குறித்து விளக்கிக் கூறினேன். அவர்கள் அதை மெதுவாக புரிந்துகொண்டனர்" என்று விவேக் ஓபராய் கூறினார்.
நடிகர் விவேக் ஓபராய் - பிரியங்கா ஆல்வா தம்பதியருக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு விவான் வீரு என்கிற 9 வயது மகனும், அமேயா நிர்வாணா என்கிற 7 வயது மகளும் உள்ளனர்.
இதையும் படிக்க: மிரட்டல் `மெகாஸ்டார் - மெகா பவர்ஸ்டார்’ காம்போ! வெளியானது சிரஞ்சீவி - ராம்சரணின் ஆச்சார்யா
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/MZdPWlw
via IFTTT
Comments
Post a Comment