Posts

Showing posts from April, 2022

'இந்தி திணிப்பை ஏற்க முடியாது; தமிழ்தான் எனது திறமையை வளர்த்தது' - ப.ரஞ்சித் பேட்டி 'தமிழ் தேசியம் பேசுபவர்கள் எப்பொழுதுமே திராவிடத்தை ஏற்க மாட்டார்கள்' என்று கருத்து தெரிவித்துள்ளார் இயக்குனர் ப.ரஞ்சித்.   நீலம் பண்பாட்டு மைய நிறுவனரும் திரைப்பட  இயக்குனருமான ப.ரஞ்சித், 'புதிய தலைமுறை' செய்தியாளர் கணேஷ் குமார் நடத்திய கலந்துரையாடலுடன் போது கூறியதாவது:- ஓடிடி தளம் குறித்து.. இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் இலக்கணம் சார்ந்த ஆர்வம் அதிகளவில் உள்ளது. கலைத்துறை எல்லோருக்கமான துறையாகவே இருந்து வருகிறது. ஓடிடி தளம் என்பது அனைத்து தயாரிப்பாளர்களுக்கான தளமாக இல்லை. பெரிய அளவிலான படத்திற்கு கிடைக்கும் முக்கியத்துவம் சிறிய அளவிலான திரைப்படங்களுக்கு ஓடிடியில் கிடைப்பதில்லை. கேஜிஎஃப், பாகுபலி வெற்றி, பான் இந்தியா படங்கள் குறித்து.. பாகுபலி, கேஜிஎப் போன்ற இந்தியா பேன் திரைப்படங்கள் என்பது ஒரு சீசன் மட்டுமே, கதாநாயகனை சார்ந்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள். மற்ற எல்லா சினிமாக்களை விட தமிழ் சினிமா தொழில்நுட்பம், கதைகள் உள்ளிட்ட  அனைத்து நிலைகளிலும் தரமானதாக உள்ளது. மொழித்திணிப்பு குறித்து.. மொழித் திணிப்பு என்பதை ஒரு காலமும் ஏற்க முடியாது. ஹிந்தி எனக்கு தெரியவில்லை என்பதற்காக வேலை வாய்ப்போ சினிமாவை எடுக்க முடியவில்லை என்ற நிலையை ஏற்படுத்தவில்லை. எனது திறமை ஹிந்தியை காட்டிலும் மிகவும் முக்கியமானதாக பார்க்கிறேன். தமிழ்தான் எனது திறமையை வளர்த்தது. இந்தியாவின் முக்கிய மொழியாக அங்கீகரிப்பதோ, ஹிந்தியை பேச வேண்டும் என்ற திணிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது, அதற்கான தேவையும் இல்லை. மொழி குறித்து சமீபகால உரையாடல் குறித்து.. வட இந்தியர்கள் தென் இந்தியர்களை அடையாளப்படுத்தும் விதமே சுவாரஸ்யமாக இருக்கும். ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு குணம் உள்ளது, அந்த குணங்களின் அடிப்படையில் தேசமாக ஒன்றினைந்துள்ளோம். தேசத்தின் ஒற்றுமை மொழியால் வேறுபடுத்தி பார்க்க கூடாது. தமிழ் தேசியம் பேசுபவர்கள் எப்பொழுதுமே திராவிடத்தை ஏற்க மாட்டார்கள். அது அவர்களின் விருப்பம்'' என்று கூறினார். இதையும் படிக்கலாம்: 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மாடல் தான் திராவிட மாடல்' - முதல்வர் ஸ்டாலின் பேச்சு Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
'தமிழ் தேசியம் பேசுபவர்கள் எப்பொழுதுமே திராவிடத்தை ஏற்க மாட்டார்கள்' என்று கருத்து தெரிவித்துள்ளார் இயக்குனர் ப.ரஞ்சித்.   நீலம் பண்பாட்டு மைய நிறுவனரும் திரைப்பட  இயக்குனருமான ப.ரஞ்சித், 'புதிய தலைமுறை' செய்தியாளர் கணேஷ் குமார் நடத்திய கலந்துரையாடலுடன் போது கூறியதாவது:- ஓடிடி தளம் குறித்து.. இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் இலக்கணம் சார்ந்த ஆர்வம் அதிகளவில் உள்ளது. கலைத்துறை எல்லோருக்கமான துறையாகவே இருந்து வருகிறது. ஓடிடி தளம் என்பது அனைத்து தயாரிப்பாளர்களுக்கான தளமாக இல்லை. பெரிய அளவிலான படத்திற்கு கிடைக்கும் முக்கியத்துவம் சிறிய அளவிலான திரைப்படங்களுக்கு ஓடிடியில் கிடைப்பதில்லை. கேஜிஎஃப், பாகுபலி வெற்றி, பான் இந்தியா படங்கள் குறித்து.. பாகுபலி, கேஜிஎப் போன்ற இந்தியா பேன் திரைப்படங்கள் என்பது ஒரு சீசன் மட்டுமே, கதாநாயகனை சார்ந்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள். மற்ற எல்லா சினிமாக்களை விட தமிழ் சினிமா தொழில்நுட்பம், கதைகள் உள்ளிட்ட  அனைத்து நிலைகளிலும் தரமானதாக உள்ளது. மொழித்திணிப்பு குறித்து.. மொழித் திணிப்பு என்பதை ஒரு காலமும் ஏற்க முடியாது. ஹிந்தி எனக்கு ...

மோசடி தொகையில் பரிசு வாங்கிய ஜாக்குலின் ஃபெர்னாண்டெஸின் ரூ.7.27 கோடி சொத்துகள் பறிமுதல்! மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் சம்பாதித்த தொகையிலிருந்து ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு பரிசாக வழங்கிய ரூ. 7.27 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்திருக்கிறது அமலாக்கத் துறை. இந்தியாவில் மோசடிகளின் மன்னனாக அறியப்படும் சுகேஷ் சந்திரசேகர் பலரை ஏமாற்றி பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை குவித்திருந்தாலும், பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு என்னவோ நல்லவராக நடந்துகொண்டிருக்கிறார். தான் சட்டவிரோதமாக குவித்த சொத்துகளிலிருந்து விலையுயர்ந்த உடைகள், நகைகள், கார் என ஜாக்குலினுக்கு பரிசுகளை வாரி இறைத்திருக்கிறார் சுகேஷ் சந்திரசேகர். இதுதான் தற்போது ஜாக்குலினுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது. சுகேஷ் சந்திரசேகர் மோசடியாக சம்பாதித்த தொகையிலிருந்து ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு சுமார் 5.71 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகளை வழங்கியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமலாக்கத்துறை, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாக்குலினுக்கு சொந்தமான 7.12 கோடி மதிப்பிலான வைப்புத்தொகையையும், 15 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்திருக்கிறது. சுகேஷ் சந்திரசேகர் தனது கூட்டாளியான பிங்கி இரானி என்பவரை பயன்படுத்தி இந்தப் பணத்தை கொடுத்திருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜாக்குலினிடம் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளது. இரட்டை இலை சின்னத்தை டிடிவி தினகரனுக்கு பெற்றுத் தருவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்தான் சுகேஷ் சந்திரசேகர். ஆனால் அவர் சிறையில் இருந்தபோதே, சிறை அதிகாரிகளின் உதவியுடன் 200 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்திருக்கிறது. சிறையில் இருக்கும் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவன நிறுவனர் ஷிவிந்தர் மோகன் சிங்கிற்கு பிணை வாங்கி தருவதாக அவரது மனைவி அதிதி சிங்கை தொலைபேசியில் ஏமாற்றி 200 கோடி ரூபாய்க்கும் மேல் பறித்திருக்கிறார் சுகேஷ் சந்திரசேகர். இந்த மோசடி தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியாபால், கூட்டாளி பிங்கி இரானி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஜாக்குலின் ஃபெர்னாண்டெஸ் இதுவரை குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் சம்பாதித்த தொகையிலிருந்து ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு பரிசாக வழங்கிய ரூ. 7.27 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்திருக்கிறது அமலாக்கத் துறை. இந்தியாவில் மோசடிகளின் மன்னனாக அறியப்படும் சுகேஷ் சந்திரசேகர் பலரை ஏமாற்றி பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை குவித்திருந்தாலும், பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு என்னவோ நல்லவராக நடந்துகொண்டிருக்கிறார். தான் சட்டவிரோதமாக குவித்த சொத்துகளிலிருந்து விலையுயர்ந்த உடைகள், நகைகள், கார் என ஜாக்குலினுக்கு பரிசுகளை வாரி இறைத்திருக்கிறார் சுகேஷ் சந்திரசேகர். இதுதான் தற்போது ஜாக்குலினுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது. சுகேஷ் சந்திரசேகர் மோசடியாக சம்பாதித்த தொகையிலிருந்து ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு சுமார் 5.71 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகளை வழங்கியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமலாக்கத்துறை, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாக்குலினுக்கு சொந்தமான 7.12 கோடி மதிப்பிலான வைப்புத்தொகையையும், 15 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்திருக்கிறது. சுகேஷ் சந்திரசேகர் தனது கூட்டாளியான பிங...

'பயணிகள் கவனிக்கவும்' OTT திரை விமர்சனம் - நெட்டிசன்கள் கவனிக்கவும்! எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய நாவலின் தலைப்பே படத்தின் தலைப்பாய் சூட்டப்பட்டிருக்கிறது என்ற சர்ச்சைக்கு நடுவே ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ள படம் ‘பயணிகள் கவனிக்கவும்’. கடந்த 2019 ஆம் ஆண்டு சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி பார்வையாளர்களை கவனிக்க வைத்த ‘விக்ருதி’ படத்தின் ரீ-மேக்தான் இப்படம். விதார்த், லட்சுமி பிரியா, கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் எஸ்.பி சக்திவேல் இயக்கியுள்ளார். லைக், கமேண்ட், ஷேருக்காக சாப்பிடுவதில் ஆரம்பித்து எதுவாக இருந்தாலும் போட்டோ, வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிடும் பழக்கத்திற்கு அடிக்ட் ஆனவர் ஆண்டனி (கருணாகரன்). ஒருநாள் ரயிலில் நிகழும் ஒரு சம்பவத்தை படம் எடுத்து பதிவிடுகிறார். எதையுமே தீர விசாரிக்காமல் , ஆர்வக்கோளாரால் அவர் செய்த செயல் காது- வாய் பேசமுடியாத நூலகர் எழிலனையும் (விதார்த்) அவரது குடும்பத்தினரையும் எப்படி பாதித்தது? விதார்த்துக்கு பணியிடத்தில், குடும்பத்தில், சமூகத்தில் ஏற்படும் நெருக்கடிகள் என்னென்ன? இந்த சூழலில் காதல் திருமணம் செய்துகொள்ளும் கருணாகரனுக்கு ஏற்படும் பிரச்சனைகள் போன்றவைதான் ’பயணிகள் கவனிக்கவும்’ கதை. வில்லத்தனமாகவும் எள்ளல்தனமாகவும் என ஒரேமாதிரி நடித்துக் கொண்டிருந்த விதார்த், நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் சிறப்பான கதாப்பாத்திரத்தை தேர்ந்தெடுத்துள்ளார். சக மாணவனுடன் சண்டை போடும் தனது மகனுக்காக கோச்சிடம் மன்னிப்பு கேட்பது, வறுமைச்சூழலை புரிந்துகொண்டு, பிய்ந்துபோன ஸ்போர்ட்ஸ் ஷூவை தைத்துக்கொள்ளலாம் என்று மகன் கூறினாலும் புது ஷூ வாங்கிக்கொடுத்து உற்சாகப்படுத்துவது, மனைவி, பிள்ளைகள் மீது பாசம் கொட்டுவது, ஹவுஸ் ஓனர் கவிதாலயா கிருஷ்ணனிடம் அட்வாண்டேஜ் எடுத்துக்கொள்ளாத இணக்கம் என பேசாமலேயே பார்வையாளர்களை நெகிழ்வுடன் பேச வைத்துவிடுகிறார் விதார்த். விதார்த்தின் மனைவி தனலட்சுமியாக லட்சுமி பிரியா. பேச்சு வராமல் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்பா அவமானப்படுத்தப்படும்போது ரெளத்திரத்துடன் கொதித்தெழும் மகனாவும், அப்பாவை புரிந்துகொள்ளும் மகனாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விதார்த்தின் மகனாக வரும் சிறுவன். மகளாக வரும் சிறுமியும் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் குறைவில்லாமல் நடித்திருக்கிறார். வெளிநாட்டிலிருந்து சென்னை வரும் கருணாகரன், "என்னடா என் மேல ஏதாவது கோபமா? என்னோட பதிவுகளுக்கு எதுவுமே லைக்ஸ், ஷேர் பண்ண மாட்ற?" என்று நண்பனிடம் ஏர்போர்ட்டில் கேட்பதில் ஆரம்பித்து தனது அம்மா, தங்கைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதையே லைக்ஸிற்காக லைவ் கொடுப்பது என சோஷியல் மீடியா அடிக்ட்டராக பிரிதிபலித்திருக்கிறார். ‘சைபர் கிரைம்’ பிரச்சனையில் சிக்கிக்கொள்ளும்போது ஏற்படும் அச்சம், மன உளைச்சல்கள் என காட்சிக்கு காட்சி ரியாக்ஷன்களால் கதைக்கு ‘ரியாலிட்டி’ கொடுத்திருக்கிறார். காதலிக்காக அவர் வாங்கிk குவிக்கும் பூந்தொட்டிகள், அவரது வீட்டை பூந்தோட்டமாக மாற்றுவது பார்வையாளர்களின் கண்களுக்கும் ஜிலீர். அதுவும், போலீஸுக்கு பயப்படும் காட்சிகளில் கருணாகரன் சிற(ரி)ப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காதல் மனைவியாக வரும் மசூம் ஷங்கர் தனது அழகான பார்வையால், சிரிப்பால் வசீகரிக்கிறார். தமிழ் சினிமாவில் க்ளைமாக்ஸ் ஃபைட் என்றாலே ’பின்னிமில்’லை புக் செய்வதுபோல போல, ‘ப்ராங், சோஷியல் மீடியா’ தொடர்பான படங்கள் என்றாலே அந்த சரித்திரனையும் புக் பண்ணுங்கப்பா என்று சொல்லிவிடுகிறார்கள் போல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும். எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் இல்லாமல் கதை நகரும் போக்கில் அவ்வப்போது சில காமெடிகளை செய்து சிரிக்க வைத்துவிடுகிறார் கருணாகரனின் நண்பனாக நடித்திருக்கும் சரித்திரன். அரசு மருத்துவமனையில் படுத்திருக்கும் முதியவரின் சோகம் நிறைந்த காட்சியில்கூட சிரிக்க வைத்து விடுகிறார். அடுத்தடுத்து, படங்களில் நடித்து சாதிக்கவேண்டும் என்றால் அவர் ஜிம்முக்கு செல்லவேண்டும் என்று பரிந்துரைக்கும் அளவுக்கு இந்தப் படத்தில் உள்ளார். பைக் ரேஸில் ஈடுபடட்ட இளைஞர்களை சமீபத்தில் மருத்துவமனையின் விபத்து பிரிவில் உதவியாளராக பணியாற்றவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதை, நினைவுபடுத்தியது நேர்மையான இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், தவறு செய்பவர்களுக்கு கொடுக்கும் தண்டனைகள். விதார்த்துக்காக துணை நிற்கும் கதாப்பாத்திரத்தில் எளிமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஹவுஸ் ஓனராக வரும் கவிதாலயா கிருஷ்ணன். அதைவிட கவனிக்கத்தக்கது, ஊடகத்தில் பணியாற்றும் அவரது மகளின் கதாப்பாத்திரம். ஒரு பொய்யான செய்தி ஏற்படுத்தும் தாக்கத்தை எப்படி எதிர்கொள்வது? அதை, எப்படி சமாளிப்பது என்ற விழிப்புணர்வையூட்டுகிறது அந்த ஊடகவியாளர் கதாப்பாத்திரம். ’கண்ணால் காண்பது பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்’ என்பதை சோஷியல் மீடியாக்காரர்களுக்கு மட்டுமல்ல, அதைப்பார்த்து அவசரத்தில் செய்தி வெளியிடும் பத்திரிகை, டிவி மீடியாக்காரர்களும் கவனிக்கும்படி காட்சிப்படுத்திய இயக்குநர் எஸ்.பி சக்திவேலுக்கு பாராட்டுகள். கதையின் ப்ளஸ்: ’குற்றமே தண்டனை’ என நடித்த விதார்த்தை ‘மன்னிப்பே தண்டனை’ என நடிக்க வைத்து நம் இதயத்தில் வெற்றியடைய வைத்திருப்பது படத்தின் ப்ளஸ். பேச இயலாத கதாப்பாத்திரங்கள்தான் படத்தில் பேசவே செய்கின்றன. நம்மை பேசவும் வைக்கின்றன. மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் இல்லாமல் இயல்பான காட்சிகளால் கவனிக்க வைக்கிறது. பாசாங்கு இல்லாத பாசமான பலக்காட்சிகள் பாசிட்டிவ் எனர்ஜியையூட்டுகின்றன. ஒரு அழகான பயணம் செய்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும் கதையில் சில குறைகளும் உள்ளன. இது அதிரடி ஆக்சன் படம் அல்ல, உண்மையான வாழ்வியலை பிரதிபலிக்கும் படம். அதனால், படத்தில் வேகத்தை எதிர்பார்க்கமுடியாது. அதேபோல், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் மீது இயக்குனநருக்கு என்ன கோபமோ? மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கங்கள் தங்களது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதில், பஞ்சாயத்து செய்து பணம் கொழிக்கும் சங்க நிர்வாகியும் இருக்கலாம், மாற்றுக்கருத்தில்லை. ஆனால், கால் இல்லாத சிறுமி விபத்தில் சிக்கிக்கொள்ள அதில் பஞ்சாயத்து பேசி பணம் பறிப்பதுபோலவும் அது ஏதோ திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட சம்பவம் போலவும் காட்சிப்படுத்தியிருப்பது நிச்சயமாக மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரிடம் சங்கடத்தை ஏற்படுத்துவபோல் அமைந்துள்ளது. நல்லவர்போல் காண்பிக்கப்படும் கோச், மற்றொரு மாணவரை கண்டிக்காமல் விதார்த்தின் மகனை மட்டுமே கண்டிப்பது, தண்டிப்பது முரண். மற்றபடி, படத்தில் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு குறைகள் ஏதுமில்லை. பாண்டிக்குமாரின் ஒளிப்பதிவும் ஷாம்நாத் நாக்கின் இசையும் அருமை. ’பகைவனுக்கு அருள்வாய்’ பாரதியின் பாடல் சூழலுக்கேற்ப பின்னணியில் ஒலித்து நம் மனதில் நின்றுவிடுகிறது. பொய் செய்திகள் லைக்ஸ், ஷேர்களை அள்ளலாம். ஆனால், அதனால் ஏற்படும் விளைவின்போது லைக்ஸ், ஷேர் செய்த ஒருவரும் துணைக்கு வரப்போவதில்லை என்பதை காண்பித்ததோடு, எந்த ஒரு செய்தியையும் தீர விசாரிக்காமல் பகிரக்கூடாது என்பதைக்கூறி சமூக ஊடகத்தினர், பத்திரிகை, டிவி, வெப்சைட், பொதுமக்கள் அனைவரையும் கவனிக்க வைத்திருக்கிறது இந்த ’பயணிகள் கவனிக்கவும்’. அதனால், ரசிகர்கள் தாராளமாக கவனித்துப் பார்க்கலாம். - வினி சர்பனா Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய நாவலின் தலைப்பே படத்தின் தலைப்பாய் சூட்டப்பட்டிருக்கிறது என்ற சர்ச்சைக்கு நடுவே ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ள படம் ‘பயணிகள் கவனிக்கவும்’. கடந்த 2019 ஆம் ஆண்டு சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி பார்வையாளர்களை கவனிக்க வைத்த ‘விக்ருதி’ படத்தின் ரீ-மேக்தான் இப்படம். விதார்த், லட்சுமி பிரியா, கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் எஸ்.பி சக்திவேல் இயக்கியுள்ளார். லைக், கமேண்ட், ஷேருக்காக சாப்பிடுவதில் ஆரம்பித்து எதுவாக இருந்தாலும் போட்டோ, வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிடும் பழக்கத்திற்கு அடிக்ட் ஆனவர் ஆண்டனி (கருணாகரன்). ஒருநாள் ரயிலில் நிகழும் ஒரு சம்பவத்தை படம் எடுத்து பதிவிடுகிறார். எதையுமே தீர விசாரிக்காமல் , ஆர்வக்கோளாரால் அவர் செய்த செயல் காது- வாய் பேசமுடியாத நூலகர் எழிலனையும் (விதார்த்) அவரது குடும்பத்தினரையும் எப்படி பாதித்தது? விதார்த்துக்கு பணியிடத்தில், குடும்பத்தில், சமூகத்தில் ஏற்படும் நெருக்கடிகள் என்னென்ன? இந்த சூழலில் காதல் திருமணம் செய்துகொள்ளும் கருணாகரனுக்கு ஏற்படும் பிரச்சனைகள் போன்றவைதான் ’பயணிகள் கவனிக்கவும்’ கதை. வில்லத்...

பலகோடி பட்ஜெட்டிலான பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க மறுத்த யஷ் - ஏன்? பலகோடி மதிப்பில் தயாராகவிருந்த பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க நடிகர் யஷ் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  பான் மசாலா விளம்பரத்தில் நடித்ததற்கு கடந்த வாரம் நடிகர் அக்‌ஷய்குமார் வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், மற்றொரு பிரபல நடிகரும் பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்திருக்கிறார். பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்த கே.ஜி.எஃப் - 2 திரைப்படத்தின் ஹீரோ யஷ், பலகோடி பட்ஜெட்டில் தயாராகவிருந்த பான் மசாலா மற்றும் ஏலக்காய் பிராண்ட் விளம்பரத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் யஷ்ஷின் ஒப்புதல்களை நிர்வகித்து வருகிற டேலண்ட் மேனேஜ்மெண்ட் ஏஜென்சியின் தலைமை அதிகாரி அர்ஜூன் பானர்ஜி இந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார். அர்ஜூன் கூறுகையில், ‘’யஷ் மற்றும் அவருடைய நீண்டகால நண்பர் பிரசாந்துடன் நாங்கள் மார்ச் 2020ஆம் ஆண்டு இணைந்தோம். எங்களுக்குள் தொடர்புகொள்ள ‘storm is coming’ என்ற பெயரில் க்ரூப் ஒன்றை உருவாக்கினது நன்கு நினைவிருக்கிறது. கே.ஜி.எஃப் - 2 இவ்வளவு பெரிய வெற்றியடையும் என்று அப்போது எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் இந்த பார்ட்னர்ஷிப்பை தொடர விரும்புகிறோம். சமீபத்தில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள பான் மசாலா விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு யஷ்ஷிற்கு கிடைத்தது. ஆனால் அதை மறுத்துவிட்டோம். யாருடன் வேலைசெய்கிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். யஷ் எப்படி நல்லமனிதரோ, அவரைப்போலவே சரியான தகவலை ரசிகர்களுக்கு கொண்டுசெல்ல விரும்புகிறோம்’’ என்று கூறியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பலகோடி மதிப்பில் தயாராகவிருந்த பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க நடிகர் யஷ் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  பான் மசாலா விளம்பரத்தில் நடித்ததற்கு கடந்த வாரம் நடிகர் அக்‌ஷய்குமார் வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், மற்றொரு பிரபல நடிகரும் பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்திருக்கிறார். பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்த கே.ஜி.எஃப் - 2 திரைப்படத்தின் ஹீரோ யஷ், பலகோடி பட்ஜெட்டில் தயாராகவிருந்த பான் மசாலா மற்றும் ஏலக்காய் பிராண்ட் விளம்பரத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் யஷ்ஷின் ஒப்புதல்களை நிர்வகித்து வருகிற டேலண்ட் மேனேஜ்மெண்ட் ஏஜென்சியின் தலைமை அதிகாரி அர்ஜூன் பானர்ஜி இந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார். அர்ஜூன் கூறுகையில், ‘’யஷ் மற்றும் அவருடைய நீண்டகால நண்பர் பிரசாந்துடன் நாங்கள் மார்ச் 2020ஆம் ஆண்டு இணைந்தோம். எங்களுக்குள் தொடர்புகொள்ள ‘storm is coming’ என்ற பெயரில் க்ரூப் ஒன்றை உருவாக்கினது நன்கு நினைவிருக்கிறது. கே.ஜி.எஃப் - 2 இவ்வளவு பெரிய வெற்றியடையும் என்று அப்போது எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் இந்த பார்ட்னர்ஷிப்பை தொடர ...

‘வாழு.. வாழவிடு’.. 11 வருடங்களுக்கு முன்பு நடிகர் அஜித் எடுத்த அந்த அதிரடி முடிவு! தன்னுடைய 40வது பிறந்த நாளில் ரசிகர் மன்றத்தை கலைத்து நடிகர் அஜித் குமார் வெளியிட்ட அறிக்கையை ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.  சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர்களுக்கு பிறந்தநாள் என்றால் ஒரு வாரத்திற்கு முன்பே அவரது ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு வந்துவிடுவார்கள். தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் திரை நட்சத்திரங்களில் முக்கியமானவர் அஜித்குமார். நாளை மே ஒன்றாம் தேதி அஜித் தனது 51வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். 11 வருடங்களுக்கு முன்பு இதேபோன்றதொரு பிறந்தநாள் கொண்டாட்ட மனநிலையில்தான் அஜித் ரசிகர்களும் இருந்தனர். மே ஒன்றாம் தேதி பிறந்தநாள் என்றால் இரண்டு தினங்களுக்கு முன்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அஜித்திடம் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது. நிச்சயம் அவரது ரசிகர்கள் அந்த அறிக்கையை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அந்த அறிக்கை என்ன?, தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கும், உச்சநட்சத்திர நடிகர்களின் வளர்ச்சிக்குமான உறவு என்ன என்பது குறித்து இந்த கட்டுரை தொகுப்பில் காணலாம். பாகவதர் காலம் காதல் தொட்டு.. கருப்பு வெள்ளை காலம் தொட்டு, கலர் ஃபுல்லான கனவுகளோடு ஊரை, உறவை, நண்பர்களை விட்டு விலகி, சாதிக்க வேண்டும். அதுவும் திரைத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கோலிவுட் என்றழைக்கப்படும் கோடம்பாக்கம் நோக்கி படையெடுத்தோர் எராளம் ஏராளம். சிறிய மேன்சன் அறையில் திரும்பிக்கூட படுக்க முடியாத இடத்தில் பசியோடும், பட்டினியோடும் காலத்தை கழித்தோர் ஏராளம் ஏராளம். சினிமா ஸ்டுடியோ வாசல் வாசலாக அலைந்து திரிந்து, கதை சொல்லி, நடித்துக் காட்டி கடைசியில் சாதித்தவர்களை விட தோல்வியுற்றவர்களே அதிகம். விடாமுயற்சியால் கோடம்பாக்கத்தில் வெற்றிக்கொடி நாட்டிய நடிகர்கள் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என பலமுறை முயன்று அதில் வெற்றி பெற்று புகழின் உச்சத்திற்குச் சென்றவர்களும் இருக்கிறார். இதில் நடிகைகளும் விதிவிலக்கல்ல. நடிகர் நாகேஷ், கவிஞர் வாலி, சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் முதல் இன்றைய திரை நட்சத்திரங்கள் பலரும் இதில் அடக்கம். இப்படியாக பல இன்னல்களுக்கிடையில் நடிகர்களாக உருமாறியவர்களின் வளர்ச்சி அவர்களது ரசிகர்களாலேயே சாத்தியமாயிற்று என்றால் அது மிகையில்லை. தமிழ் சினிமா உலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர் முதல் இன்றைய நகைச்சுவை நடிகர் யோகிபாபு வரை அனைவரும் தங்களது நடிப்பால் ரசிகர்களின் ஆதரவோடுதான் வளர்ந்திருப்பார்கள், வளர்ந்திருக்கிறார்கள். நாளடைவில் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட ரசிகர் மன்றங்கள்தான் நடிகனின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றிய கமல்ஹாசன்  புரட்சித் தலைவர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் எம்ஜிஆர், நடிகராக அரசியல்வாதியாக ஏன் தமிழக முதல்வராக இருந்தார் என்றால் அதற்கு முக்கிய காரணங்களில் அவரது ரசிகர்களுக்கும் நிச்சயம் இடமுண்டு. இப்படியாக சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், ரவிச்சந்திரன், எஸ்.எஸ்ஆர், ரஜினிகாந்த் என பலருக்கும் ரசிகர் மன்றம் இருந்தாலும், தனது ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றிய பெருமை கமல்ஹாசனையே சேரும். இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் நடிகை குஷ்புவிற்கு கோவில் கட்டிய ரசிகர்களும் உண்டு. இப்படியாக தனது வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய ரசிகர் மன்றத்தை 11 வருடங்களுக்கு முன்பு நடிகர் அஜித்குமார் கலைத்தார். ஏன் என்ன காரணம் அது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம். ஆரம்ப காலத்தில் அல்டிமேட் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட நடிகர் அஜித்குமார் அமராவதி என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ஆசை, காதல் கோட்டை, அவள் வருவாளா, வாலி, அமர்க்களம், தீனா, சிட்டிசன், ரெட், வில்லன், ஆழ்வார், வரலாறு, விஸ்வாசம், வலிமை உள்ளிட்ட 60 படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக ஜெலிக்கிறார். 2011ல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அஜித்தின் அறிக்கை கிரீடம், பில்லா, ஏகன், அசல் போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக இருந்த நேரத்தில் தனது 40வது பிறந்த நாளில் ரசிகர்களுக்கு ஒரு கடிதத்தை வெளியிட்டார். (29.04.2011) தேதியிட்டு, பிறந்த நாள் அறிக்கை அஜித்குமார் என்ற தலைப்பில் வெளிவந்த அந்த கடித்தத்தில்... ”நீண்ட நாட்களாகவே என்னை சிந்திக்க வைத்த ஒரு கருத்தை சொல்ல இன்றே உகந்த நேரம் என கருதி இந்த அறிக்கையை வெளியிடுகிறேன், நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை, நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால் அதற்கு ஆதரவு தரவும், சரியாக இல்லாவிட்டால் விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு. எனது ரசிகர்கள் சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன், வருகிற மே 1ஆம் தேதி என்னுடைய 40வது பிறந்த நாளில் எனது கருத்தை, எனது முடிவாக அறிவிக்கிறேன், இன்று முதல் எனது தலைமையின் கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார். இப்படியாக வளர்ந்து வரும் ஒரு நடிகர் தனது ரசிகர் மன்றத்தை கலைப்பதன் மூலம் அவருக்கு நேரும் இழப்புகளை கருத்தில் கொள்ளாமல் ரசிகர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு இப்படி ஒரு முடிவை அவர் தனது ரசிகர்களுக்குச் சொன்னார். அஜித்தின் இந்த செயலை இன்றளவும் பலரும் பாராட்டி வருகிறார்கள். அஜித்குமார் ரசிகர் மன்றங்களை கலைப்பதாக சொன்னாலும் கூட இன்று வரை அவரது ரசிகர் பட்டாளம் குறைந்த பாடில்லை. நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டுதான் செல்கிறது. அவரது படங்களின் முதல் நாள் காட்சிகளின் போது கிடைக்கும் வரவேறு அதனை உறுதி செய்கிறது.  ரசிகர்களை கண்டிக்க தவறான அஜித் தனது ரசிகர்கள் பலத்தால் தன்னுடைய படங்களுக்கு வசூல் மழை கொட்டுகிறது என்பதால், ரசிகர்கள் செய்யும் அத்துமீறல்களை நடிகர்கள் பலரும் கண்டிக்க தயங்வார்கள். ஆனால், பல முறை தனது ரசிகர்கள் அத்துமீறி செல்லும் அதனை கண்டித்து அஜித் அறிக்கை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். குறிப்பாக சமீபத்தில் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அவரது ரசிகர்கள் அத்துமீறி பல இடங்களில் நடந்து கொண்டதை கண்டித்து அவர் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.  அந்த அறிக்கையில், “உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது மரியாதையை கூட்டும். இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார். அதேபோல், ”என்னை தல என்றோ வேறு ஏதேனும் பட்டப்பெயர்களை குறிப்பிட்டோ அழைக்க வேண்டாம்” என்று கடந்த டிசம்பர் மாதம் அஜித் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.  இப்படி ரசிகர்களை பொறுத்தவரை அஜித் குமார் எடுத்து வரும் நடவடிக்கைகள் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற தரப்பினர் மத்தியிலும் அவர் மீதான மரியாதையை கூட்டி வருகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தன்னுடைய 40வது பிறந்த நாளில் ரசிகர் மன்றத்தை கலைத்து நடிகர் அஜித் குமார் வெளியிட்ட அறிக்கையை ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.  சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர்களுக்கு பிறந்தநாள் என்றால் ஒரு வாரத்திற்கு முன்பே அவரது ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு வந்துவிடுவார்கள். தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் திரை நட்சத்திரங்களில் முக்கியமானவர் அஜித்குமார். நாளை மே ஒன்றாம் தேதி அஜித் தனது 51வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். 11 வருடங்களுக்கு முன்பு இதேபோன்றதொரு பிறந்தநாள் கொண்டாட்ட மனநிலையில்தான் அஜித் ரசிகர்களும் இருந்தனர். மே ஒன்றாம் தேதி பிறந்தநாள் என்றால் இரண்டு தினங்களுக்கு முன்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அஜித்திடம் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது. நிச்சயம் அவரது ரசிகர்கள் அந்த அறிக்கையை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அந்த அறிக்கை என்ன?, தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கும், உச்சநட்சத்திர நடிகர்களின் வளர்ச்சிக்குமான உறவு என்ன என்பது குறித்து இந்த கட்டுரை தொகுப்பில் காணலாம். பாகவதர் காலம்...

ஆயிரம் கோடி வசூலை கடந்தது கேஜிஎஃப்-2 ! இந்தியில் மட்டும் 350 கோடி வசூலை வாரிக் குவித்தது! உலகளவில் கேஜிஎஃப்-2 ரூ.1000 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. அதன் இந்தி பதிப்பும் ரூ.350 கோடி வசூலித்து புதிய சாதனையை படைத்துள்ளது. கே.ஜி.எஃப் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. குறிப்பாக ராக்கி பாய் கதாபாத்திரத்திற்கு பெரும் ரசிகர் பட்டாளம் உருவாகி இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் கன்னடா, இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என 5 மொழிகளில் கே.ஜி.எஃப் -2 வெளியானது. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இரண்டாம் பாகம் இருந்ததாக ரசிகர்கள் தரப்பில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால், இரண்டு வாரங்கள் தாண்டியும் நிறைய திரையரங்குகளில் கே.ஜி.எஃப்2 இன்றளவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.  “ராக்கி பாய்” ஆக யாஷ் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி முக்கிய வேடங்களில் நடித்த பிரஷாந்த் நீலின் “கேஜிஎஃப்: அத்தியாயம் 2” பாக்ஸ் ஆபிஸில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வசூல் சாதனைகள் குறித்த தகவல்கள் நாளுக்கு நாள் வெளியான வண்ணம் இருந்தன. சஞ்சய் தத் மற்றும் ரவீனா டாண்டன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம், உலகளவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தங்கல், ஆர்.ஆர்.ஆர் மற்றும் பாகுபலி-2 ஆகிய படங்களுக்கு அடுத்தபடியாக ஆயிரம் கோடி வசூலை தாண்டும் நான்காவது இந்தியப் படமாக கேஜிஎஃப்-2 உருவெடுத்துள்ளது. தங்கல் - ரூ. 2,024 கோடி) பாகுபலி- 2 - ரூ. 1,810 கோடி ஆர்ஆர்ஆர்  - ரூ. 1,100 கோடி கேஜிஎஃப்-2 - ரூ.1000 கோடி* கேஜிஎஃப்-2  இந்திப் பதிப்பு ரூ.350 கோடி வசூலை தாண்டி புதிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி மூன்றாவது வாரத்திலேயே மிக வேகமாக 350 கோடி வசூலைக் கடந்த திரைப்படமாக கேஜிஎஃப்-2 மாறியுள்ளது. முன்னதாக அதிவேகமாக இந்தியில் 350 கோடி வசூலைக் கடந்த படமாக பாகுபலி-2 இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திப் பதிப்பில் வசூல் சாதனைகளில் முக்கிய மைல்கல்லை எட்ட கேஜிஎஃப்-2 எடுத்துக் கொண்ட நாட்கள்: ரூ.50 கோடி - முதல் நாள் ரூ.100 கோடி - 2ஆம் நாள் ரூ.150 கோடி - 4ஆம் நாள் ரூ.200 கோடி - 5ஆம் நாள் ரூ.250 கோடி - 7ஆம் நாள் ரூ.300 கோடி - 11ஆம் நாள் ரூ.350 கோடி - 15ஆம் நாள் தமிழ்நாட்டிலும் கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழின் முன்னணி ஹீரோவான விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் அந்த நேரத்தில் வெளியாகி இருந்த போது கே.ஜி.எஃப் படத்தின் வசூல் பெரிய அளவில் பாதிக்கவில்லை. அதிக அளவிலான திரையரங்களில் தமிழ்நாடு முழுவதும் ஓடிக் கொண்டு தான் இருக்கின்றது.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
உலகளவில் கேஜிஎஃப்-2 ரூ.1000 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. அதன் இந்தி பதிப்பும் ரூ.350 கோடி வசூலித்து புதிய சாதனையை படைத்துள்ளது. கே.ஜி.எஃப் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. குறிப்பாக ராக்கி பாய் கதாபாத்திரத்திற்கு பெரும் ரசிகர் பட்டாளம் உருவாகி இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் கன்னடா, இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என 5 மொழிகளில் கே.ஜி.எஃப் -2 வெளியானது. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இரண்டாம் பாகம் இருந்ததாக ரசிகர்கள் தரப்பில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால், இரண்டு வாரங்கள் தாண்டியும் நிறைய திரையரங்குகளில் கே.ஜி.எஃப்2 இன்றளவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.  “ராக்கி பாய்” ஆக யாஷ் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி முக்கிய வேடங்களில் நடித்த பிரஷாந்த் நீலின் “கேஜிஎஃப்: அத்தியாயம் 2” பாக்ஸ் ஆபிஸில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வசூல் சாதனைகள் குறித்த தகவல்கள் நாளுக்கு நாள் வெளியான வண்ணம் இருந்தன. சஞ்சய் தத் மற்றும் ரவீனா டாண்டன் முக்கிய வேடங...

'தென்னிந்திய படங்களை நான் பார்ப்பதே இல்லை' பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக் தென்னிந்திய திரைப்படங்களை நான் இதுவரை பார்த்ததே கிடையாது என்று பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக் தெரிவித்துள்ளார். நவாசுதின் சித்திக் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோபான்ட்டி 2 படம் திரையரங்குகளில் அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இதுதொடர்பாக அவர் தனியார் செய்தி வலைதளத்திற்கு நேற்று அவர் பேட்டியளித்தார். அப்போது புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் -2 ஆகிய தென்னிந்திய திரைப்படங்கள் சமீபத்தில் வட இந்தியாவிலும் பெரிய அளவில் வெற்றி பெற்றது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது: பொதுவாக தென்னிந்திய திரைப்படங்களை இதுவரை நான் பார்த்ததே கிடையாது. அதனால் தென்னிந்திய திரையுலகம் குறித்த கேள்விக்கு நான் பதில் கூறுவது சரியாக இருக்காது. ஆனால், ஒரு விஷயத்தை என்னால் தெளிவாக கூற முடியும். ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் சிறிது காலத்துக்கு மக்கள் அதுகுறித்தே பேசிக் கொண்டிருப்பார்கள். அந்த திரைப்படத்தின் கதை, திரைக்கதைகளின் தாக்கத்தில் பல படங்கள் வெளியாகும். இதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு கிடையாது. பல்வேறு காரணங்களுக்காக பலதரப்பட்ட மக்கள் திரையரங்குகளுக்கு வருகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் ஒரு திரைப்படம் இருப்பதே உண்மையான வெற்றி என நான் நினைக்கிறேன். இவ்வாறு நவாசுதின் சித்திக் கூறினார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தென்னிந்திய திரைப்படங்களை நான் இதுவரை பார்த்ததே கிடையாது என்று பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக் தெரிவித்துள்ளார். நவாசுதின் சித்திக் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோபான்ட்டி 2 படம் திரையரங்குகளில் அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இதுதொடர்பாக அவர் தனியார் செய்தி வலைதளத்திற்கு நேற்று அவர் பேட்டியளித்தார். அப்போது புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் -2 ஆகிய தென்னிந்திய திரைப்படங்கள் சமீபத்தில் வட இந்தியாவிலும் பெரிய அளவில் வெற்றி பெற்றது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது: பொதுவாக தென்னிந்திய திரைப்படங்களை இதுவரை நான் பார்த்ததே கிடையாது. அதனால் தென்னிந்திய திரையுலகம் குறித்த கேள்விக்கு நான் பதில் கூறுவது சரியாக இருக்காது. ஆனால், ஒரு விஷயத்தை என்னால் தெளிவாக கூற முடியும். ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் சிறிது காலத்துக்கு மக்கள் அதுகுறித்தே பேசிக் கொண்டிருப்பார்கள். அந்த திரைப்படத்தின் கதை, திரைக்கதைகளின் தாக்கத்தில் பல படங்கள் வெளியாகும். இதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு கிடையாது. பல்வேறு காரணங்களுக்காக பலதரப்பட்ட மக்கள் திரையரங்குகளுக்கு...

டபுள் ரோலில் டபுள் ட்ரீட் கொடுக்கும் அஜித்! - ‘ஏகே 61’ அப்டேட்ஸ் ’அஜித் 61’ படத்தில் அஜித் இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைந்துள்ளனர். நாயகியாக ரகுல் ப்ரீத் சிங், தபு நடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஜிப்ரான் இசையமக்கிறார். வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்திற்கக கடந்த ஹைதராபாத்தில் பிரம்மாண்ட அரங்கை படக்குழு அமைத்து வந்த நிலையில், ஏப்ரல் முதல் வாரத்தில் ‘அஜித் 61’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.வரும் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள். இந்த நிலையில், அஜித் இப்படத்தில் வில்லன் - ஹீரோ என டபுள் ரோலில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அஜித் வரும் மே 1 ஆம் தேதி தனது 51 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் டைட்டில் லுக்கையும் வெளியிடவுள்ளனர். ஏற்கனவே, ‘வாலி’, ‘வரலாறு’, ’வில்லன்’, ‘சிட்டிசன்’, ‘அசல்’, ‘அட்டகாசம்’, ’பில்லா’ என அஜித் நடித்தவற்றில் சில டபுள் ரோல் படங்கள், அவரது சினிமா கேரியரில் 'வரலாறு' படைத்ததால் ’ஏகே 61’ படமும் டபுள் ட்ரீட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
’அஜித் 61’ படத்தில் அஜித் இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைந்துள்ளனர். நாயகியாக ரகுல் ப்ரீத் சிங், தபு நடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஜிப்ரான் இசையமக்கிறார். வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்திற்கக கடந்த ஹைதராபாத்தில் பிரம்மாண்ட அரங்கை படக்குழு அமைத்து வந்த நிலையில், ஏப்ரல் முதல் வாரத்தில் ‘அஜித் 61’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.வரும் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள். இந்த நிலையில், அஜித் இப்படத்தில் வில்லன் - ஹீரோ என டபுள் ரோலில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அஜித் வரும் மே 1 ஆம் தேதி தனது 51 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் டைட்டில் லுக்கையும் வெளியிடவுள்ளனர். ஏற்கனவே, ‘வாலி’, ‘வரலாறு’, ’வில்லன்’, ‘சிட்டிசன்’, ‘அசல்’, ‘அட்டகாசம்’, ’பில்லா’ என அஜித் நடித்தவற்றில் சில டபுள் ரோல் படங...

வடிவேலுடன் கலக்கிய மூத்த நகைச்சுவை நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார் தமிழ் திரையுலகின் பழம்பெரும் நகைச்சுவை, குணச்சித்திர நடிகையான ரங்கம்மா பாட்டி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 87. கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் தெலுங்குப்பாளையத்தைச் சேர்ந்தவர் கே.ஆர்.ரங்கம்மா என்ற ரங்கம்மா பாட்டி. சினிமா மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக, மேடை நாடகங்களில் நடித்து வந்த இவர், எம்.ஜி.ஆரின் 'விவசாயி' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய் உட்பட பல நடிகர்களின் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் வடிவேலுடன், ரங்கம்மா பாட்டி இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் ஹிட்டாகியுள்ளன. குறிப்பாக, ‘கி.மு.’ திரைப்படத்தில் இவரும், வடிவேலும் சேர்ந்த நடித்த நகைச்சுவையான ‘போறது போற அந்த நாயை சூனு சொல்லிட்டு போ’ எனக் கூறும் நகைச்சுவை, பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இதேபோல், வடிவேலுவுடன், ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தில் பேய் பிடித்த பாட்டியாக, இவர் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.  சுமார் 500 படங்களுக்கு மேல் நடித்துள்ள ரங்கம்மா பாட்டி, ‘சூரியகாந்தி’ படத்தில், கண்ணதாசனின் பிரபல பாடலான, ’பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது’ என்ற பாடல் காட்சியில் ஜெயலலிதா அருகில் அமர்ந்திருப்பார். ‘குட்டிமா’ என்ற குறும்படத்திலும் இவர் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக, வாய்ப்பில்லாமல் வறுமையில் இருந்தார். இதனால், கடந்த 2018-ம் ஆண்டு மெரினா கடற்கரையில் கர்சீப், சோப்பு, பொம்மைகள் விற்று வந்தார். தனக்கு நடிகர் சங்கம் உதவ வேண்டும் என்றும் அப்போது கோரிக்கை விடுத்ததை அடுத்து சில நடிகர்கள் அவருக்கு உதவி செய்தனர்.  இந்நிலையில், வயது மூப்பு மற்றும் வறுமை காரணமாக, அவருடைய சொந்த ஊரான, தெலுங்குப்பாளையத்துக்குச் சில வருடங்களுக்கு முன் சென்றார். அங்கு கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த அவர், இன்று காலமானார். அவர் மறைவுக்கு திரையுலகினர்  மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நகைச்சுவை, குணச்சித்திர நடிகையான ரங்கம்மா பாட்டி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 87. கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் தெலுங்குப்பாளையத்தைச் சேர்ந்தவர் கே.ஆர்.ரங்கம்மா என்ற ரங்கம்மா பாட்டி. சினிமா மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக, மேடை நாடகங்களில் நடித்து வந்த இவர், எம்.ஜி.ஆரின் 'விவசாயி' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய் உட்பட பல நடிகர்களின் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் வடிவேலுடன், ரங்கம்மா பாட்டி இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் ஹிட்டாகியுள்ளன. குறிப்பாக, ‘கி.மு.’ திரைப்படத்தில் இவரும், வடிவேலும் சேர்ந்த நடித்த நகைச்சுவையான ‘போறது போற அந்த நாயை சூனு சொல்லிட்டு போ’ எனக் கூறும் நகைச்சுவை, பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இதேபோல், வடிவேலுவுடன், ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தில் பேய் பிடித்த பாட்டியாக, இவர் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. ...

டீசரே இப்படி என்றால் மெய்ன் பிக்சர் எப்படியிருக்கும்?: மிரட்டும் ’பிசாசு 2’ டீசர் 'பிசாசு 2’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி கவனம் ஈர்த்த ’பிசாசு ’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘பிசாசு 2’ படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் மிஷ்கின். ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, பூர்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திகில் கதையை மையமாக கொண்டு எடுக்கப்படும் ’பிசாசு 2' படப்படிப்பு திண்டுக்கல், பவானிசாகர் பகுதிகளில் நடைபெற்று நிறைவடைந்தது. கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் பெங்களூரில் நிறைவுற்றன. வரும் மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின், தெலுங்கு உரிமையை ‘விஜய் 66’ இயக்குநர் தில்ராஜு கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில், ‘பிசாசு 2’ படத்தின் டீசர் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு. பேய் படங்கள் என்றாலே ரசிகர்களை பயமுறுத்தும். ஆனால், ‘பிசாசு’ படத்தில் பேயாக நடித்த பிரக்யா ரசிகர்களின் பிரியங்களை அள்ளிக்குவித்த பேயாக மாறினார். அந்தளவிற்கு நடிப்பாலும் அழகாலும் ரசிக்க வைத்தார். இப்படத்தில், மென்மையாக பயமுறுத்தியிருந்த மிஷ்கின், ‘பிசாசு 2’ வில் ஹார்ட் பீட் எகிறவைக்கும் அளவுக்கு டீசரில் மிரட்டியிருக்கிறார். பெண்ணின் யோனியுடன் சுவற்றில் தொங்கும் ஓவியத்துடன் டீசர் துவங்குகிறது. இருட்டில் தனியாக ஊஞ்சலில் ஆடும் ஆண்ட்ரியா, உருகும் மெழுகுவர்த்தி, மேகங்கள் கலையும் நிலா என ஒவ்வொரு காட்சியும் இதயத்தை நடுநடுங்க வைக்கிறது. பிசாசை தனது இசையால் உயிர்பித்திருக்கிறார் கார்த்திக் ராஜா. யோனியுடன் காட்டப்படும் பெண்ணின் ஓவியம், ஆண்ட்ரியா ஒருவனை வெறிகொண்டு வெட்டுவது போன்றவை பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்டு பழிவாங்கும் பேய் கதையாக இருக்குமோ என்ற யூகத்தையும் ஏற்படுத்துகிறது. விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வந்து கவனம் ஈர்க்கிறார். டீசரே இப்படி என்றால் மெய்ன் பிக்சர் எப்படி மிரட்டுமோ என்ற எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
'பிசாசு 2’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி கவனம் ஈர்த்த ’பிசாசு ’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘பிசாசு 2’ படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் மிஷ்கின். ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, பூர்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திகில் கதையை மையமாக கொண்டு எடுக்கப்படும் ’பிசாசு 2' படப்படிப்பு திண்டுக்கல், பவானிசாகர் பகுதிகளில் நடைபெற்று நிறைவடைந்தது. கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் பெங்களூரில் நிறைவுற்றன. வரும் மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின், தெலுங்கு உரிமையை ‘விஜய் 66’ இயக்குநர் தில்ராஜு கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில், ‘பிசாசு 2’ படத்தின் டீசர் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு. பேய் படங்கள் என்றாலே ரசிகர்களை பயமுறுத்தும். ஆனால், ‘பிசாசு’ படத்தில் பேயாக நடித்த பிரக்யா ரசிகர்களின் பிரியங்களை அள்ளிக்குவித்த பேயாக மாறினார். அந்தளவிற்கு நடிப்பாலும் அழகாலும் ரசிக்க வைத்தார். இப்படத்தில், மென்மையாக பயமுறுத்தியிருந்த மிஷ்கின், ‘பிசாசு 2’ வில் ஹார்ட் பீட் எகிறவைக்கும் அளவுக்கு டீசரில்...

’மணி ஹெய்ஸ்ட்’ கொரிய ரீமேக்: ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்ஃப்ளிக்ஸ் கொரிய மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள ‘மணி ஹெய்ஸ்ட்’ சீரிஸின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். வெப் சீரிஸ்கள் மீது உலக ரசிகர்களைத் வெறிகொள்ளவைத்த ’மணி ஹெய்ஸ்ட்’ இறுதிப்பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இதனைத்தொடர்ந்து, தற்போது கொரிய மொழியில் ’மணி ஹெய்ஸ்ட்’ மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. புரஃபசர் கதாபாத்திரத்தில் ஜூ ஜி டேவும், பெர்லினாக ’ஸ்க்விட் கேம்’மில் கவனம் ஈர்த்த பார்க் ஹே சூவும், டோக்கியோவாக ஜூன் சாங் சியோ, ரியோவாக லீ ஹியூன் வூ, நைரோபியாக ஜாங் யூன் வூவும் நடித்துள்ளார்கள். சமீபத்தில் நடிகர்களின் அறிமுக டீசரை வெளியிட்டிருந்தது நெட்ஃப்ளிக்ஸ். ஒரிஜினல் ‘மணி ஹெய்ஸ்ட்’போல் கவனம் ஈர்க்கவில்லை என்ற விமர்சனத்தை எதிர்கொண்டாலும், புரஃபசர், ரேக்கல், பெர்லின், ரியோ, டோக்கியோ, டென்வர், மோனிகா, ஆர்த்தோ, ஹெல்சிகி, நைரோபி, மாஸ்கோ என மாஸ் காட்டிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள கொரிய நடிகர்கள் பாஸ் ஆகிறார்களா என்பதை பார்க்க செம்ம வெய்ட்டிங்கில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இந்த நிலையில், வரும் ஜுன் 24 ஆம் தேதி கொரிய மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடர் வெளியாகும் என்று நெட்ஃப்ளிக்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ’ஜாய்ண்ட் எக்கனாமிக் ஏரியா’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்தொடரின் ப்ரோமோ வீடியோவோடு வெளியிட்டிருக்கிறார்கள். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
கொரிய மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள ‘மணி ஹெய்ஸ்ட்’ சீரிஸின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். வெப் சீரிஸ்கள் மீது உலக ரசிகர்களைத் வெறிகொள்ளவைத்த ’மணி ஹெய்ஸ்ட்’ இறுதிப்பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இதனைத்தொடர்ந்து, தற்போது கொரிய மொழியில் ’மணி ஹெய்ஸ்ட்’ மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. புரஃபசர் கதாபாத்திரத்தில் ஜூ ஜி டேவும், பெர்லினாக ’ஸ்க்விட் கேம்’மில் கவனம் ஈர்த்த பார்க் ஹே சூவும், டோக்கியோவாக ஜூன் சாங் சியோ, ரியோவாக லீ ஹியூன் வூ, நைரோபியாக ஜாங் யூன் வூவும் நடித்துள்ளார்கள். சமீபத்தில் நடிகர்களின் அறிமுக டீசரை வெளியிட்டிருந்தது நெட்ஃப்ளிக்ஸ். ஒரிஜினல் ‘மணி ஹெய்ஸ்ட்’போல் கவனம் ஈர்க்கவில்லை என்ற விமர்சனத்தை எதிர்கொண்டாலும், புரஃபசர், ரேக்கல், பெர்லின், ரியோ, டோக்கியோ, டென்வர், மோனிகா, ஆர்த்தோ, ஹெல்சிகி, நைரோபி, மாஸ்கோ என மாஸ் காட்டிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள கொரிய நடிகர்கள் பாஸ் ஆகிறார்களா என்பதை பார்க்க செம்ம வெய்ட்டிங்கில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இந்த நிலையில், வரும் ஜுன் 24 ஆம் தேதி கொரிய மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள ‘மணி ஹெய்ஸ்...

"சினிமாவில் நான் முத்தமிடுவதை என் மகள் விரும்பவில்லை" - நடிகர் விவேக் ஓபராய் அம்மா அல்லாத ஒருவரை முத்தமிடுவது எனக்குப் பிடிக்கவில்லை என்று தனது மகள் தன்னிடம் கூறியதாக நடிகர் விவேக் ஓபராய் கூறியுள்ளார்.    தனது சிறப்பான நடிப்பின் மூலம் பாலிவுட் திரை உலகில் பல கோடி ரசிகர்களை கொண்டு இன்றுவரை மிகச்சிறந்த நாயகனாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விவேக் ஓபராய். பாலிவுட் திரையுலகில் 20 வருடத்தை நிறைவு செய்த நடிகர் விவேக் ஓபராய் 'இந்தியா டுடே' உடனான நேர்காணலில் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம்திறந்து பேசினார். அப்போது அவர் திரையில் தனது மனைவி அல்லாத வேறொருவரை முத்தமிடுவது தனது மகளுக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்தார். அந்த பேட்டியில் நடிகர் விவேக் ஓபராய் கூறுகையில், ''என் மகன் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தான். "நீங்கள் இந்த பைக் ஸ்டண்ட்ஸ் எல்லாம் செய்தீர்களா?  என்றான். என் இளைய மகள் என்னிடம் வந்து, 'அப்பா, நீங்கள் அம்மா அல்லாத ஒருவரை முத்தமிடுவது எனக்குப் பிடிக்கவில்லை. அம்மா அல்லாத இன்னொருவரை முத்தமிட உங்களுக்கு அனுமதி இல்லை' என்றாள். கொரோனாவின் போதுதான் என்னுடைய பிள்ளைகளுக்கு உட்கார்ந்து என்னிடம் இதுபோன்ற கேள்விகளைக் கேட்க அவர்களுக்கு நேரம் கிடைத்தது. மக்கள் ஏன் என்னை போட்டோ எடுக்கிறார்கள், ஏன் மக்கள் வந்து ஆட்டோகிராப் எடுக்க விரும்புகிறார்கள் என்று அவர்கள் கேட்டனர். உங்களுடன் செல்ஃபி எடுத்தவர்களை உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் உங்கள் நண்பர்களா? என்று அவர்கள் குழந்தைத்தனமாக கேட்டார்கள். பின்னர் நான் அவர்களுக்கு எனது ரசிகர்கள் பட்டாளம், திரையுலக புகழ் வெளிச்சம் குறித்து விளக்கிக் கூறினேன்.  அவர்கள் அதை மெதுவாக புரிந்துகொண்டனர்" என்று விவேக் ஓபராய் கூறினார். நடிகர் விவேக் ஓபராய் - பிரியங்கா ஆல்வா தம்பதியருக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு  விவான் வீரு என்கிற 9 வயது மகனும், அமேயா நிர்வாணா என்கிற 7 வயது மகளும் உள்ளனர். இதையும் படிக்க: மிரட்டல் `மெகாஸ்டார் - மெகா பவர்ஸ்டார்’ காம்போ! வெளியானது சிரஞ்சீவி - ராம்சரணின் ஆச்சார்யா Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
அம்மா அல்லாத ஒருவரை முத்தமிடுவது எனக்குப் பிடிக்கவில்லை என்று தனது மகள் தன்னிடம் கூறியதாக நடிகர் விவேக் ஓபராய் கூறியுள்ளார்.    தனது சிறப்பான நடிப்பின் மூலம் பாலிவுட் திரை உலகில் பல கோடி ரசிகர்களை கொண்டு இன்றுவரை மிகச்சிறந்த நாயகனாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விவேக் ஓபராய். பாலிவுட் திரையுலகில் 20 வருடத்தை நிறைவு செய்த நடிகர் விவேக் ஓபராய் 'இந்தியா டுடே' உடனான நேர்காணலில் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம்திறந்து பேசினார். அப்போது அவர் திரையில் தனது மனைவி அல்லாத வேறொருவரை முத்தமிடுவது தனது மகளுக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்தார். அந்த பேட்டியில் நடிகர் விவேக் ஓபராய் கூறுகையில், ''என் மகன் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தான். "நீங்கள் இந்த பைக் ஸ்டண்ட்ஸ் எல்லாம் செய்தீர்களா?  என்றான். என் இளைய மகள் என்னிடம் வந்து, 'அப்பா, நீங்கள் அம்மா அல்லாத ஒருவரை முத்தமிடுவது எனக்குப் பிடிக்கவில்லை. அம்மா அல்லாத இன்னொருவரை முத்தமிட உங்களுக்கு அனுமதி இல்லை' என்றாள். கொரோனாவின் போதுதான் என்னுடைய பிள்ளைகளுக்கு உட்கார்ந்து என்னிடம் இதுபோன்ற கேள்வி...

மிரட்டல் `மெகாஸ்டார் - மெகா பவர்ஸ்டார்’ காம்போ! வெளியானது சிரஞ்சீவி - ராம்சரணின் ஆச்சார்யா பிரபல தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவியும் அவரது மகன் ராம் சரணும் இணைந்து நடித்துள்ள 'ஆச்சார்யா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. புஷ்பா, ஆர்.ஆர்.ஆர். திரைப்படங்களின் வரிசையில் டோலிவுட்டில் உருவான ராம்சரணின் 'ஆச்சார்யா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஸ்ரீமந்துடு, ஜனதா கேரேஜ், பரத் அன்னே நேனு என சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை இயக்கிய கொரட்டாலா சிவாவின் இயக்கத்தில் இப்படம் உருவாகியதும், கூடுதல் எதிர்பார்ப்புகளை உண்டாக்கியது. கடந்த 2013 ஆம் ஆண்டு பிரபாஸ் நடித்த ‘மிர்ச்சி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் கொரட்டலா சிவா. இப்படம் சூப்பர் ஹிட் அடிக்கவே, மகேஷ் பாபுவின் ‘ஸ்ரீமந்துடு’, ‘பரத் எனே நேனு’ என இரண்டு படங்களைக் இயக்கி, அதையும் சூப்பர் ஹிட் ஆக்கினார். அடுத்ததாக மோகன்லால், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இயக்கிய ‘ஜனதா கரேஜ்’ படமும் வெற்றி பெற்றது. இதுவரை நான்கே படங்களை இயக்கி தெலுங்கின் முன்னணி இயக்குநராக இருக்கும் கொரட்டலா சிவா, தற்போது சிரஞ்சீவியும் அவரது மகன் ராம் சரணையும் வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சிரஞ்சீவியும் ராம்சரணும் இயற்கை பாதுகாக்கும் பசுமைப் போராளிகளாக நடித்துள்ளனர். 'ஆச்சார்யா' திரைப்படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது. உலகம் முழுவதும் இன்று வெளியான 'ஆச்சார்யா' திரைப்படம், சென்னையிலும் காலை 5 மணிக்கு வெளியானது. இதையும் படிங்க... வாலி இந்தி ரீமேக் விவகாரம்: போனி கபூருக்கு எதிராக எஸ்.ஜே.சூர்யா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பிரபல தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவியும் அவரது மகன் ராம் சரணும் இணைந்து நடித்துள்ள 'ஆச்சார்யா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. புஷ்பா, ஆர்.ஆர்.ஆர். திரைப்படங்களின் வரிசையில் டோலிவுட்டில் உருவான ராம்சரணின் 'ஆச்சார்யா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஸ்ரீமந்துடு, ஜனதா கேரேஜ், பரத் அன்னே நேனு என சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை இயக்கிய கொரட்டாலா சிவாவின் இயக்கத்தில் இப்படம் உருவாகியதும், கூடுதல் எதிர்பார்ப்புகளை உண்டாக்கியது. கடந்த 2013 ஆம் ஆண்டு பிரபாஸ் நடித்த ‘மிர்ச்சி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் கொரட்டலா சிவா. இப்படம் சூப்பர் ஹிட் அடிக்கவே, மகேஷ் பாபுவின் ‘ஸ்ரீமந்துடு’, ‘பரத் எனே நேனு’ என இரண்டு படங்களைக் இயக்கி, அதையும் சூப்பர் ஹிட் ஆக்கினார். அடுத்ததாக மோகன்லால், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இயக்கிய ‘ஜனதா கரேஜ்’ படமும் வெற்றி பெற்றது. இதுவரை நான்கே படங்களை இயக்கி தெலுங்கின் முன்னணி இயக்குநராக இருக்கும் கொரட்டலா சிவா, தற்போது சிரஞ்சீவியும் அவரது மகன் ராம் சரணையும் வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார். இதில...

ரயில்களில் கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்பட விளம்பரங்கள் கமல்ஹாசன் நடித்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள 'விக்ரம்' திரைப்படத்துக்கு ரயில்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் வெற்றிகளைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் 'விக்ரம்'. ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படத்துக்கான விளம்பரங்களை பிரம்மாண்டமாக மேற்கொண்டுள்ளது படக்குழு. படத்தை ரயில் பெட்டிகளில் மிகப்பெரிய அளவில் ஒட்டி விளம்பரம் செய்துவருகிறது. ரயிலில் 'விக்ரம்' விளம்பரம் இடம்பெற்றுள்ள காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கமல்ஹாசன், ரயில் பயணம் தனக்குப் பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மூன்றாம் பிறை, தேவர் மகன், மகாநதி திரைப்படங்களின் ரயில் காட்சிகளை அவர் நினைவுகூர்ந்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
கமல்ஹாசன் நடித்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள 'விக்ரம்' திரைப்படத்துக்கு ரயில்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் வெற்றிகளைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் 'விக்ரம்'. ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படத்துக்கான விளம்பரங்களை பிரம்மாண்டமாக மேற்கொண்டுள்ளது படக்குழு. படத்தை ரயில் பெட்டிகளில் மிகப்பெரிய அளவில் ஒட்டி விளம்பரம் செய்துவருகிறது. ரயிலில் 'விக்ரம்' விளம்பரம் இடம்பெற்றுள்ள காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கமல்ஹாசன், ரயில் பயணம் தனக்குப் பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மூன்றாம் பிறை, தேவர் மகன், மகாநதி திரைப்படங்களின் ரயில் காட்சிகளை அவர் நினைவுகூர்ந்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/iqgOCPH via IFTTT

வாலி இந்தி ரீமேக் விவகாரம்: போனி கபூருக்கு எதிராக எஸ்.ஜே.சூர்யா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி வாலி திரைப்பட ரீமேக் விவகாரத்தில் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 1999ம் ஆண்டு இயக்குநர் எஸ்.ஜே சூர்யா இயக்குநராக அறிமுகமான திரைப்படம் வாலி. அஜித் இரட்டை வேடத்தில் நடித்த இந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்து, எஸ்.ஜே.சூர்யாவுக்கு அடையாளத்தை பெற்றுத்தந்தது. கோலிவுட்டில் ஹிட்டடித்த இந்த திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர் போனிகபூர் முடிவு செய்திருந்தார். அதன்படி, வாலி படத்தின் தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் எஸ். எஸ். சக்கரவர்த்தி இடமிருந்து படத்தை ரீமேக் செய்யும் உரிமையை பெற்றிருந்தார் போனி கபூர். தொடர்புடைய செய்தி: எஸ்.ஜே.சூர்யாவுக்கும் போனிகபூருக்கும் இடையே என்ன பிரச்னை? வாலி பட விவகாரத்தில் நடப்பதென்ன? அதே நேரத்தில் அந்த திரைப்படத்தை இந்தி மொழியில் தானே இயக்க எஸ்.ஜே. சூர்யா திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் `கதை எழுதியவருக்கே கதை சொந்தம் என்ற அடிப்படையில் வாலி திரைப்படத்தை போனிகபூர் ரீமேக் செய்யக்கூடாது’ என சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.ஜே.சூர்யா மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்தி ரீமேக்கிற்கான வேலையை தொடங்க போனி கபூருக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்தது. இதை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், `சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் மூல வழக்கின் தீர்ப்பைப் பொறுத்து திரைப்படத்திற்கான உரிமையை எஸ்.ஜே.சூர்யா கோர முடியும்’ என கருத்து தெரிவித்தனர். சமீபத்திய செய்தி: இந்தி தேசிய மொழி அல்ல என கருத்து தெரிவித்த நடிகர் சுதீப் - ஆதரவு தெரிவித்த பாஜக முதல்வர் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
வாலி திரைப்பட ரீமேக் விவகாரத்தில் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 1999ம் ஆண்டு இயக்குநர் எஸ்.ஜே சூர்யா இயக்குநராக அறிமுகமான திரைப்படம் வாலி. அஜித் இரட்டை வேடத்தில் நடித்த இந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்து, எஸ்.ஜே.சூர்யாவுக்கு அடையாளத்தை பெற்றுத்தந்தது. கோலிவுட்டில் ஹிட்டடித்த இந்த திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர் போனிகபூர் முடிவு செய்திருந்தார். அதன்படி, வாலி படத்தின் தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் எஸ். எஸ். சக்கரவர்த்தி இடமிருந்து படத்தை ரீமேக் செய்யும் உரிமையை பெற்றிருந்தார் போனி கபூர். தொடர்புடைய செய்தி:  எஸ்.ஜே.சூர்யாவுக்கும் போனிகபூருக்கும் இடையே என்ன பிரச்னை? வாலி பட விவகாரத்தில் நடப்பதென்ன? அதே நேரத்தில் அந்த திரைப்படத்தை இந்தி மொழியில் தானே இயக்க எஸ்.ஜே. சூர்யா திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் `கதை எழுதியவருக்கே கதை சொந்தம் என்ற அடிப்படையில் வாலி திரைப்படத்தை போனிகபூர் ரீமேக் செய்யக்கூடாது’ என சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.ஜே.சூர்யா மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோ...

விராட் கோலி மனைவியை விமர்சித்த நடிகர் - நெட்டிசன்கள் பதிலடி ''விராட் கோலியின் வாழ்க்கைக்கு கெட்ட நேரத்தை கொண்டு வந்துவிட்டார் அனுஷ்கா சர்மா'' என சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்துள்ளார் பாலிவுட் நடிகர் கேஆர்கே   விராட் கோலி கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாமல் திணறிவரும் நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனிலும் ஸ்கோர் செய்யமுடியாமல் திணறி வருகிறார். இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 128 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார் கோலி. விராட் கோலி தொடர்ந்து திணறிவரும் நிலையில், நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்த பிறகுதான் கோலியின் பேட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது என்று பாலிவுட் நடிகர் கேஆர்கே விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''விராட் கோலியின் வாழ்க்கைக்கு கெட்ட நேரத்தை கொண்டு வந்துவிட்டார் அனுஷ்கா சர்மா. இதனால் அனுஷ்காவை விவாகரத்து செய்தால் மட்டுமே கோலியால் பழைய மாதிரி விளையாட முடியும். அவரை திருமணம் செய்த பிறகுதான் விராட் கோலியின் பேட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது''என்று ட்வீட் போட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இந்த ட்வீட்டுக்கு தற்போது பல்வேறு தரப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் குறிப்பிடுகையில், ''ஒரு வீரர் ஃபார்மில் இல்லாததும், ஃபார்முக்கு திரும்புவதும் சகஜமான ஒன்றுதான். எல்லா வீரர்களும் இந்த சூழலை எதிர்கொள்வார்கள். இவ்வாறிருக்கையில் விராட் கோலியின் ஆட்டத்திறனை அவரது தனிப்பட்ட வாழ்க்கையுடன் முடிச்சு போடுவதா?'' எனப் பதிவிட்டுள்ளார். இதேபோல் பலரும்  நடிகர் கே.ஆர்.கே.விற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். பலத்த கண்டனங்கள் எழுந்ததை தொடர்ந்து நடிகர் கேஆர்கே அந்த ட்விட்டை நீக்கி விட்டார். பாலிவுட் நடிகர் கேஆர்கே அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்பதும், நெட்டிசன்கள் அவருக்கு பதிலடி கொடுப்பதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இதற்காக கேஆர்கேவின் சமூக வலைத்தளப் பக்கங்கள் பலமுறை முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையும் படிக்க: 'பிராவோ நீங்க கீப்பிங் பண்ணுங்க, நான் பவுலிங் பண்றேன்' கலாய்த்து தள்ளிய தோனி! Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
''விராட் கோலியின் வாழ்க்கைக்கு கெட்ட நேரத்தை கொண்டு வந்துவிட்டார் அனுஷ்கா சர்மா'' என சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்துள்ளார் பாலிவுட் நடிகர் கேஆர்கே   விராட் கோலி கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாமல் திணறிவரும் நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனிலும் ஸ்கோர் செய்யமுடியாமல் திணறி வருகிறார். இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 128 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார் கோலி. விராட் கோலி தொடர்ந்து திணறிவரும் நிலையில், நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்த பிறகுதான் கோலியின் பேட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது என்று பாலிவுட் நடிகர் கேஆர்கே விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''விராட் கோலியின் வாழ்க்கைக்கு கெட்ட நேரத்தை கொண்டு வந்துவிட்டார் அனுஷ்கா சர்மா. இதனால் அனுஷ்காவை விவாகரத்து செய்தால் மட்டுமே கோலியால் பழைய மாதிரி விளையாட முடியும். அவரை திருமணம் செய்த பிறகுதான் விராட் கோலியின் பேட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது''என்று ட்வீட் போட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இந்த ட்வீட்டுக்கு தற்போது பல்வேறு தரப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். நெட்டிசன் ஒருவர்...

"என்னது.. அஜய் தேவ்கன் ரியல் சிங்கமா?" கம்பு சுற்றி களமிறங்கிய தமிழ் ரசிகர்கள் இந்தி மொழி விவகாரத்தில் பாலிவுட் நடிகர் அஜ்ய தேவ்கனுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் அவரை ரியல் சிங்கம் என ஒருபுறம் புகழ்ந்து தள்ளி #SinghamOurRealHero என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து கொண்டிருக்க, மறுபுறம் நமது தமிழ் ரசிகர்கள், "தம்பி.. நீங்க ரீல் சிங்கம் தான். நாங்கதாம்பா ரியல் சிங்கம்" என ட்விட்டரை அதகளப்படுத்தி வருகின்றனர். நடிகர் அஜய் தேவ்கனுக்கு இது போதாத காலம் போலவே தெரிகிறது. தேவையில்லாமல் கன்னட நடிகர் சுதீப்பை வம்புக்கு இழுத்து, 'இந்தி தான் நமது தேசிய மொழி' என அவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. "இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்றே இல்லாத போது இந்தி எப்படி தேசிய மொழி ஆகும்" என நெட்டீசன்கள் அவரை மரண பங்கம் செய்து வருகின்றனர். நெட்டீசன்கள் கொடுத்த டார்ச்சரை தாங்க முடியாத தேவ்கன், "அனைத்து மொழிகளையும் நான் மதிக்கிறேன்" எனக் கூறும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டார். இதனால் அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது போல தெரிந்தது. ஆனால், அஜய் தேவ்கன் விட்டாலும் அவரது ரசிகர்கள் இந்த பிரச்னையை விடுவதாக தெரியவில்லை. கடந்த சில மணிநேரமாக ட்விட்டரில் அஜய் தேவ்கனுக்கு ஆதரவாக அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிலும் சில ரசிகர்கள் ஒருபடி மேலே சென்று, அஜய் தேவ்கன் போலீஸாக நடித்த 'சிங்கம்' பட ஸ்டில்களை போஸ்ட் செய்து, "எங்க ஆளு ரியல் சிங்கம் டா.. மோதி பாக்காதீங்க" என்ற ரேஞ்சுக்கு அநியாயத்துக்கு பில்டப் செய்து வந்தனர். இதனால் பொறுமை இழந்த தமிழ் ரசிகர்கள், ட்விட்டரில் அவர்களுக்கு பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளனர். உண்மையில், இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய ஹிட் அடித்த 'சிங்கம்' திரைப்படம் தான், ஹிந்தியில் அதே பெயரில் ரீ மேக் செய்யப்பட்டது. அந்த திரைப்படத்தில் அஜய் தேவ்கன் நடித்திருந்தார். இந்நிலையில், 'ரீ மேக்' படம் என்று கூட தெரியாமல் அந்த படத்தின் ஸ்டில்களை வைத்து அஜய் தேவ்கனை 'ரியல்' சிங்கம் என அவரது ரசிகர்கள் ஏகத்துக்கும் புகழ்ந்து வந்தனர். இதனை பொறுக்க முடியாத தமிழ் ரசிகர்கள், சூர்யாவின் 'சிங்கம்' பட ஸ்டில்களை வைத்து, "தம்பி.. நாங்க தான் ரியல் சிங்கம். நீங்க ரீ மேக் செய்யப்பட்ட ரீல் சிங்கம். இது கூட தெரியாமல் போஸ்ட் வேறு செய்கிறீர்களே.." என கலாய்து வருகின்றனர். தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் கன்னடா, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி ரசிகர்களும் அஜய் தேவ்கனை கழுவி ஊற்றி வருகிறார்கள். அதில் தெலுங்கு ரசிகர் ஒருவர் செய்துள்ள ட்வீட்டில், "நடிகருக்கோ தேசிய மொழிக்கும், ஆட்சி மொழிக்கும் இடையேயான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. அவரது ரசிகர்களுக்கோ ஒரிஜினல் படத்துக்கும், ரீ மேக் படத்துக்கும் இடையேயான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. என்ன ஒரு ஒற்றுமை!" எனக் கூறியிருக்கிறார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
இந்தி மொழி விவகாரத்தில் பாலிவுட் நடிகர் அஜ்ய தேவ்கனுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் அவரை ரியல் சிங்கம் என ஒருபுறம் புகழ்ந்து தள்ளி  #SinghamOurRealHero என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து  கொண்டிருக்க, மறுபுறம் நமது தமிழ் ரசிகர்கள், "தம்பி.. நீங்க ரீல் சிங்கம் தான். நாங்கதாம்பா ரியல் சிங்கம்" என ட்விட்டரை அதகளப்படுத்தி வருகின்றனர். நடிகர் அஜய் தேவ்கனுக்கு இது போதாத காலம் போலவே தெரிகிறது. தேவையில்லாமல் கன்னட நடிகர் சுதீப்பை வம்புக்கு இழுத்து, 'இந்தி தான் நமது தேசிய மொழி' என அவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. "இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்றே இல்லாத போது இந்தி எப்படி தேசிய மொழி ஆகும்" என நெட்டீசன்கள் அவரை மரண பங்கம் செய்து வருகின்றனர். நெட்டீசன்கள் கொடுத்த டார்ச்சரை தாங்க முடியாத தேவ்கன், "அனைத்து மொழிகளையும் நான் மதிக்கிறேன்" எனக் கூறும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டார். இதனால் அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது போல தெரிந்தது. ஆனால், அஜய் தேவ்கன் விட்டாலும் அவரது ரசிகர்கள் இந்த பிரச்னையை விடுவதாக தெரியவில்லை. கடந்த சில மணிநேரமாக ட்விட்ட...