இளையராஜாவின் இளமையான 2022 ஆங்கில புத்தாண்டு வாழ்த்து! சகலகலா வல்லவன் படத்தில் தனது இசையில் இடம்பெற்ற ‘நியூ இயர்’ பாடலின் ஒரு சிறு பகுதியை பாடி, இசையமைப்பாளர் இளையராஜா மக்களுக்கு தனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டு என்றாலே, எல்லோருக்கும் நியாபகத்துக்கு வருவது எஸ்.பி.பி. குரலில், இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளியான 'விஷ் யூ ஹேப்பி நியூ இயர்' என்ற சகலகலா வல்லவன் படத்தில் வெளியான பாடல்தான். இப்போதுவரை, ஆங்கில புத்தாண்டுக்கு அதைவிட சிறப்பான வேறொரு பாடலை தமிழ் சினிமா பெறவில்லை என்றுகூட சொல்லலாம். காரணம் இன்றுவரை ஒவ்வொரு வருட ஆங்கில புத்தாண்டு இரவிலும் அந்தப் பாடல்தான் தமிழகத்தில் பார்ட்டிக்களிலும் கொண்டாட்டங்களிலும் ஓங்கி ஒலிக்கிறது. இந்த 2022 புத்தாண்டுக்கு, அந்தப் பாடலை இளையராஜாவே பாடி தன் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாளை 2022-ம் ஆண்டு பிறக்கவுள்ள நிலையில், இந்தப் பாடலை பாடி அதை வீடியோவாக தனது சமூகவலைதளத்தில் ‘இது எப்படி இருக்கு’ எனக்கேட்டு பதிவிட்டுள்ளார் இளையராஜா. Wish you all happy new year 2022.#HappyNewYear2022 pic.twitter.com/cSlW4BKQGa — Ilaiyaraaja (@ilaiyaraaja) December 31, 2021 1982ல் இளையராஜா இசையில் வெளியான இப்பாடல், 40 வருடங்களுக்கு பிறகு இன்றும் அதே புத்துணர்ச்சியோடு இருப்பதன் காரணம், இளையராஜாதான். அதை நமக்கு மீண்டுமொரு முறை நிரூபிக்கும் வகையில், ‘இளமை இதோ இதோ... இனிமை இதோ இதோ’ என்று இப்போதும் புத்துணர்வுடன் பாடியுள்ளார் இளையராஜா. சமீபத்திய செய்தி: முடிவுக்கு வந்தது ஆர்.ஆர்.ஆர். திரைப்பட வெளியீடு தகராறு Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

சகலகலா வல்லவன் படத்தில் தனது இசையில் இடம்பெற்ற ‘நியூ இயர்’ பாடலின் ஒரு சிறு பகுதியை பாடி, இசையமைப்பாளர் இளையராஜா மக்களுக்கு தனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
ஆங்கில புத்தாண்டு என்றாலே, எல்லோருக்கும் நியாபகத்துக்கு வருவது எஸ்.பி.பி. குரலில், இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளியான 'விஷ் யூ ஹேப்பி நியூ இயர்' என்ற சகலகலா வல்லவன் படத்தில் வெளியான பாடல்தான். இப்போதுவரை, ஆங்கில புத்தாண்டுக்கு அதைவிட சிறப்பான வேறொரு பாடலை தமிழ் சினிமா பெறவில்லை என்றுகூட சொல்லலாம். காரணம் இன்றுவரை ஒவ்வொரு வருட ஆங்கில புத்தாண்டு இரவிலும் அந்தப் பாடல்தான் தமிழகத்தில் பார்ட்டிக்களிலும் கொண்டாட்டங்களிலும் ஓங்கி ஒலிக்கிறது.

இந்த 2022 புத்தாண்டுக்கு, அந்தப் பாடலை இளையராஜாவே பாடி தன் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாளை 2022-ம் ஆண்டு பிறக்கவுள்ள நிலையில், இந்தப் பாடலை பாடி அதை வீடியோவாக தனது சமூகவலைதளத்தில் ‘இது எப்படி இருக்கு’ எனக்கேட்டு பதிவிட்டுள்ளார் இளையராஜா.
Wish you all happy new year 2022.#HappyNewYear2022 pic.twitter.com/cSlW4BKQGa
— Ilaiyaraaja (@ilaiyaraaja) December 31, 2021
1982ல் இளையராஜா இசையில் வெளியான இப்பாடல், 40 வருடங்களுக்கு பிறகு இன்றும் அதே புத்துணர்ச்சியோடு இருப்பதன் காரணம், இளையராஜாதான். அதை நமக்கு மீண்டுமொரு முறை நிரூபிக்கும் வகையில், ‘இளமை இதோ இதோ... இனிமை இதோ இதோ’ என்று இப்போதும் புத்துணர்வுடன் பாடியுள்ளார் இளையராஜா.
சமீபத்திய செய்தி: முடிவுக்கு வந்தது ஆர்.ஆர்.ஆர். திரைப்பட வெளியீடு தகராறு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3mJYlzM
via IFTTT
Comments
Post a Comment