’உள்ளம் உருகுதய்யா’: கவனம் ஈர்க்கும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ பாடல் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘ஜெய் பீம்’ வெளியாகி பாராட்டுகளைக் குவித்தது. அடுத்ததாக, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா- பிரியங்கா மோகன் இணைந்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண், நடிகை ராதிகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ள, இப்படத்தில் வில்லனாக வினய் நடித்துள்ளார். இப்படத்தின், முதல்பாடலான ‘வாடா தம்பி’ கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி வெளியான நிலையில், நேற்று மாலை ‘உள்ளம் உருகுதய்யா உன்னை உத்து உத்துப் பார்க்கயில’ யுகபாரதி வரிகளில் வெளியாகியுள்ளது. ‘உள்ளம் உருகுதய்யா முருகா’ பாடலையே ரீமிக்ஸ் செய்தது போல் இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ பாடல் வந்தனா ஸ்ரீனிவாசன், பிருந்தா மாணிக்கவாசகன் பெண் குரல்களில் கவனம் ஈர்க்கிறது. அவர்களின் குரல்களோடு சூர்யா பாடல் வரிகளைப் போலவே ‘அழகா... அழகா’ என்று அழகாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்திட்டு வருகிறார்கள். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘ஜெய் பீம்’ வெளியாகி பாராட்டுகளைக் குவித்தது. அடுத்ததாக, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா- பிரியங்கா மோகன் இணைந்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண், நடிகை ராதிகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ள, இப்படத்தில் வில்லனாக வினய் நடித்துள்ளார்.

இப்படத்தின், முதல்பாடலான ‘வாடா தம்பி’ கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி வெளியான நிலையில், நேற்று மாலை ‘உள்ளம் உருகுதய்யா உன்னை உத்து உத்துப் பார்க்கயில’ யுகபாரதி வரிகளில் வெளியாகியுள்ளது. ‘உள்ளம் உருகுதய்யா முருகா’ பாடலையே ரீமிக்ஸ் செய்தது போல் இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ பாடல் வந்தனா ஸ்ரீனிவாசன், பிருந்தா மாணிக்கவாசகன் பெண் குரல்களில் கவனம் ஈர்க்கிறது. அவர்களின் குரல்களோடு சூர்யா பாடல் வரிகளைப் போலவே ‘அழகா... அழகா’ என்று அழகாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்திட்டு வருகிறார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3z37E2T
via IFTTT
Comments
Post a Comment