நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வடிவேலு நடிக்கும் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ எனும் திரைப்படத்தை சுராஜ் இயக்கிவருகிறார். அதற்கான இசை உருவாக்கப் பணிக்காக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் வடிவேலு, இயக்குநர் சுராஜ் ஆகியோர் லண்டன் சென்றிருந்தனர். 10 நாட்களுக்கும் மேலாக அங்கு தங்கியிருந்த நடிகர் வடிவேலு கடந்த வாரம் லண்டனில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு கடந்த 23ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது என்றும், விரைந்து குணமடைந்து வரும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, நடிகர் வடிவேலுவைத் தொடர்ந்து இயக்குநர் சுராஜுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, தாம் நலமாக இருப்பதாக புதிய தலைமுறைக்கு அவர் பேட்டியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வடிவேலு நடிக்கும் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ எனும் திரைப்படத்தை சுராஜ் இயக்கிவருகிறார். அதற்கான இசை உருவாக்கப் பணிக்காக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் வடிவேலு, இயக்குநர் சுராஜ் ஆகியோர் லண்டன் சென்றிருந்தனர். 10 நாட்களுக்கும் மேலாக அங்கு தங்கியிருந்த நடிகர் வடிவேலு கடந்த வாரம் லண்டனில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு கடந்த 23ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது என்றும், விரைந்து குணமடைந்து வரும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, நடிகர் வடிவேலுவைத் தொடர்ந்து இயக்குநர் சுராஜுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, தாம் நலமாக இருப்பதாக புதிய தலைமுறைக்கு அவர் பேட்டியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/32J9x8U
via IFTTT
Comments
Post a Comment