சூர்யா தயாரிக்கும் படத்திற்காக டப்பிங் பணிகளை தொடங்கிய அருண் விஜய் மகன் அர்னவ் சூர்யா தயாரிப்பில், நடிகர் அருண் விஜய் மகன் அர்னவ் விஜய்யின் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்காக அர்னவ் டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனை பெருமையுடன் அருண் விஜய் பகிர்ந்திருக்கிறார். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமாரின் பேரனும் நடிகர் அருண் விஜய் மகனுமான அர்னவ், நடிகர் சூர்யா தயாரிக்கும் திரைப்படத்தில் அறிமுகமாகியுள்ளார். முழுக்க முழுக்க ஊட்டியில் படமாக்கப்படும், இந்தப்படத்தை இயக்குநர் சரவ் சண்முகம் இயக்கியுள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் அர்னவிற்கு தந்தையாக அருண் விஜய்யே நடித்துள்ளார். சிறுவனுக்கும் அவன் வளர்க்கும் நாய்க்கும் இடையேயான பாசப்பிணைப்புதான் கதைக்களம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதால் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அருண் விஜய்யின் மகன் அர்னவ் டப்பிங் பேசும் புகைப்படத்தைப் பகிர்ந்து “எனது குழந்தை டப்பிங் பேசுவது பெருமைமிகுந்த தருணம்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

சூர்யா தயாரிப்பில், நடிகர் அருண் விஜய் மகன் அர்னவ் விஜய்யின் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்காக அர்னவ் டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனை பெருமையுடன் அருண் விஜய் பகிர்ந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமாரின் பேரனும் நடிகர் அருண் விஜய் மகனுமான அர்னவ், நடிகர் சூர்யா தயாரிக்கும் திரைப்படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

முழுக்க முழுக்க ஊட்டியில் படமாக்கப்படும், இந்தப்படத்தை இயக்குநர் சரவ் சண்முகம் இயக்கியுள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் அர்னவிற்கு தந்தையாக அருண் விஜய்யே நடித்துள்ளார்.

சிறுவனுக்கும் அவன் வளர்க்கும் நாய்க்கும் இடையேயான பாசப்பிணைப்புதான் கதைக்களம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதால் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அருண் விஜய்யின் மகன் அர்னவ் டப்பிங் பேசும் புகைப்படத்தைப் பகிர்ந்து “எனது குழந்தை டப்பிங் பேசுவது பெருமைமிகுந்த தருணம்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3C2aNAU
via IFTTT
Comments
Post a Comment