தியேட்டர்களில் வெளியாகும் அக்ஷய் குமாரின் ‘பெல்பாட்டம்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு அக்ஷய் குமாரின் ‘பெல்பாட்டம்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ள ’பெல்பாட்டம்’ படத்தின் அறிவிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் வெளியானது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்றினால் மார்ச் மாதம் முதல் சினிமா படப்பிடிப்புகள் நடத்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.கொரோனா வைரஸ் தொற்றின் போது இந்தியாவில் ஷூட்டிங் நடத்த தடை போடப்பட்டிருந்ததால், ”வெளிநாட்டில் ஷூட்டிங் தொடங்கி, அங்கேயே முடித்த உலகின் முதல் படம்” என்ற பெருமையும் இப்படத்திற்கு உண்டு. ரஞ்சித் திவார் இயக்கியுள்ள இப்படம், கடந்த 1980 ஆம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஸ்பை த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், தமிழ் நடிகர் தலைவாசல் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அக்ஷய் குமாருடன், ஹீமா குரேஷி, லாரா தத்தா, வாணி கபூர் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ‘பெல்பாட்டம்’ தியேட்டர்களில் வெளியாகிறது என்று நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

அக்ஷய் குமாரின் ‘பெல்பாட்டம்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ள ’பெல்பாட்டம்’ படத்தின் அறிவிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் வெளியானது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்றினால் மார்ச் மாதம் முதல் சினிமா படப்பிடிப்புகள் நடத்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.கொரோனா வைரஸ் தொற்றின் போது இந்தியாவில் ஷூட்டிங் நடத்த தடை போடப்பட்டிருந்ததால், ”வெளிநாட்டில் ஷூட்டிங் தொடங்கி, அங்கேயே முடித்த உலகின் முதல் படம்” என்ற பெருமையும் இப்படத்திற்கு உண்டு.

ரஞ்சித் திவார் இயக்கியுள்ள இப்படம், கடந்த 1980 ஆம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஸ்பை த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், தமிழ் நடிகர் தலைவாசல் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அக்ஷய் குமாருடன், ஹீமா குரேஷி, லாரா தத்தா, வாணி கபூர் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ‘பெல்பாட்டம்’ தியேட்டர்களில் வெளியாகிறது என்று நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3zLKJbe
via IFTTT
Comments
Post a Comment