யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த விஜய்யின் ’செல்ஃபி புள்ள’ பாடல் விஜய்யின் ’கத்தி’படத்தின் ’செல்ஃபி புள்ள’ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கத்தி’ திரைப்படம், விவசாயிகளின் பிரச்சனைகளைப் பேசி பாராட்டுகளைக் குவித்தது. இரட்டை வேடங்களில் விஜய் கவனம் ஈர்த்தார். ஒருபுறம் படம் கதைக்காக வரவேற்பை பெற்றாலும், இப்படத்தின் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. அவற்றில், குறிப்பாக, மதன் கார்க்கி வரிகளில் விஜய்யும் சுனிதி செளகானும் பாடிய ‘செல்ஃபி புள்ள’ பாடல் இந்தியா முழுக்க வைரல் ஹிட் அடித்தது. பாடல் மட்டுமல்ல... ‘செல்ஃபி’யும்தான். இந்தப் பாடலுக்குப் பிறகுதான் மக்கள் அதிகம் செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டினார்கள். இந்த நிலையில், ‘செல்ஃபி புள்ள’ பாடலின் வீடியோ யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. ஏற்கனவே, விஜய்யின் ’வாத்தி கம்மிங்’, ‘ஆளப்போறான் தமிழன்’, ’வாத்தி கம்மிங் பாடல் வரிகள் வீடியோ’, ‘வெறித்தனம்’, ’என் ஜீவன் வாழுதே’, ’ஈனா மீனா டீகா’ பாடல் வீடியோக்கள் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த நிலையில், 7 வது பாடலாக அந்த லிஸ்ட்டில் தற்போது ‘செல்ஃபி புள்ள’ பாடலும் இணைந்திருக்கிறது. இதனை விஜய் ரசிகர்கள் உற்சாகமுடன் கொண்டாடி வருகிறார்கள். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

விஜய்யின் ’கத்தி’படத்தின் ’செல்ஃபி புள்ள’ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கத்தி’ திரைப்படம், விவசாயிகளின் பிரச்சனைகளைப் பேசி பாராட்டுகளைக் குவித்தது. இரட்டை வேடங்களில் விஜய் கவனம் ஈர்த்தார். ஒருபுறம் படம் கதைக்காக வரவேற்பை பெற்றாலும், இப்படத்தின் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. அவற்றில், குறிப்பாக, மதன் கார்க்கி வரிகளில் விஜய்யும் சுனிதி செளகானும் பாடிய ‘செல்ஃபி புள்ள’ பாடல் இந்தியா முழுக்க வைரல் ஹிட் அடித்தது. பாடல் மட்டுமல்ல... ‘செல்ஃபி’யும்தான். இந்தப் பாடலுக்குப் பிறகுதான் மக்கள் அதிகம் செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டினார்கள்.

இந்த நிலையில், ‘செல்ஃபி புள்ள’ பாடலின் வீடியோ யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. ஏற்கனவே, விஜய்யின் ’வாத்தி கம்மிங்’, ‘ஆளப்போறான் தமிழன்’, ’வாத்தி கம்மிங் பாடல் வரிகள் வீடியோ’, ‘வெறித்தனம்’, ’என் ஜீவன் வாழுதே’, ’ஈனா மீனா டீகா’ பாடல் வீடியோக்கள் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த நிலையில், 7 வது பாடலாக அந்த லிஸ்ட்டில் தற்போது ‘செல்ஃபி புள்ள’ பாடலும் இணைந்திருக்கிறது. இதனை விஜய் ரசிகர்கள் உற்சாகமுடன் கொண்டாடி வருகிறார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2V8J1Cf
via IFTTT
Comments
Post a Comment