சசிக்குமார் நடிப்பில் மீண்டும் உருவாகும் ‘முந்தானை முடிச்சு’ – இயக்குநர் யார் தெரியுமா? சசிகுமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் உருவாக உள்ளது. இதனை, சுந்தரபாண்டியன் படத்தின் இயக்குநர் எஸ்.ஆர் பிரபாகரன் இயக்கவுள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த, 1983ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ’முந்தானை முடிச்சு’. பாக்யராஜ் இயக்கி நடித்த அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இன்றும் முந்தானை முடிச்சு திரைப்படத்திற்கு ரசிகர்கள் உண்டு. இப்படத்தில், வரும் வசனங்களையும் நடிகர்களையும் எந்த கால கிட்ஸ்களாலும் மறக்க முடியாது. அப்படியொரு சிறப்பான திரைக்கதையை அமைத்திருந்தார் பாக்யராஜ். இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ‘முந்தானை முடிச்சு’ படத்தை மீண்டும் உருவாக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இயக்குநர் யார் என்பதை தெரிவிக்கவில்லை. இந்நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு சசிகுமார் தயாரித்து நடித்த ’சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர் பிரபாகரன் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இவர், சசிகுமார் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ’கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தினையும் எஸ்.ஆர் பிரபாகரன்தான் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

சசிகுமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் உருவாக உள்ளது. இதனை, சுந்தரபாண்டியன் படத்தின் இயக்குநர் எஸ்.ஆர் பிரபாகரன் இயக்கவுள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
கடந்த, 1983ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ’முந்தானை முடிச்சு’. பாக்யராஜ் இயக்கி நடித்த அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இன்றும் முந்தானை முடிச்சு திரைப்படத்திற்கு ரசிகர்கள் உண்டு. இப்படத்தில், வரும் வசனங்களையும் நடிகர்களையும் எந்த கால கிட்ஸ்களாலும் மறக்க முடியாது. அப்படியொரு சிறப்பான திரைக்கதையை அமைத்திருந்தார் பாக்யராஜ்.

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ‘முந்தானை முடிச்சு’ படத்தை மீண்டும் உருவாக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இயக்குநர் யார் என்பதை தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு சசிகுமார் தயாரித்து நடித்த ’சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர் பிரபாகரன் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இவர், சசிகுமார் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ’கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தினையும் எஸ்.ஆர் பிரபாகரன்தான் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3pZMEUn
via IFTTT
Comments
Post a Comment